ADDED : நவ 02, 2025 02:49 AM

பீஜிங்: நடப்பாண்டுக்கான, 32வது 'ஏபெக்' எனப்படும், ஆசிய - பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு கூட்டமைப்பின் தலைமை பொறுப்பை கிழக்காசிய நாடான தென்கொரியா ஏற்று ஆண்டு உச்சி மாநாட்டை நடத்தியது.
இதைத் தொடர்ந்து வரும், 2026ம் ஆண்டுக்கான தலைமை பொறுப்பை சீனா ஏற்றுக்கொண்டுள்ளது. அடுத்தாண்டு நடைபெற உள்ள உச்சி மாநாடு சீனாவின் தென்பகுதியில் உள்ள ஷென்சென் நகரில் நடத் தப்படும் என அந்நாட்டு அதிபர் ஷீ ஜின்பிங் தெரிவித்துள்ளார்.
ஆசிய - பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு கூட்டமைப்பு மாநாட்டை சீனா நடத்துவது இது மூன்றாவது முறை. ஏற்கனவே, கடந்த 2001ல் ஷாங்காயிலும், 2014ல் பீஜிங்கிலும் இம்மாநாட்டை சீனா நடத்தியுள்ளது.
'ஏபெக்' மாநாட்டை நடத்தும் வாய்ப்பை பயன்படுத்தி, ஆசியா - பசிபிக் பிராந்தியத்தின் வளர்ச்சிக்கு அதிக உற்சாகத்தையும், உத்வேகத்தையும் அளிக்க சீனா விரும்புவதாக ஷீ ஜின்பிங் தெரிவித்தார்.

