நிவாரண முகாம் அருகே இஸ்ரேல் தாக்குதல்; 27 பாலஸ்தீனியர்கள் பலி
நிவாரண முகாம் அருகே இஸ்ரேல் தாக்குதல்; 27 பாலஸ்தீனியர்கள் பலி
ADDED : ஜூன் 03, 2025 08:53 PM

காசா: காசாவின் தெற்கு முனை பகுதியில், நிவாரண பொருட்கள் வழங்கும் இடமருகே இஸ்ரேல் விமானப்படை நடத்திய தாக்குதலில் பாலஸ்தீனத்தை சேர்ந்த 27 பேர் உயிரிழந்தனர்.
இது தொடர்பாக விளக்கமளித்துள்ள இஸ்ரேல் விமானப்படை, குறிப்பிட்ட வழித்தடத்தை தாண்டி வேறு பகுதிகளில் சந்தேகத்திற்கு இடமான வகையில் அவர்கள் சென்றதாகவும், தங்கள் படைகள் அருகே வர வேண்டாம் என்ற எச்சரிக்கையை அவர்கள் பொருட்படுத்தவில்லை என விளக்கமளித்து உள்ளது. என்ன நடந்தது என்பது குறித்து விசாரணை நடப்பதாகவும் தெரிவித்து உள்ளது.
காசாவின் வடக்கு முனையில் நடக்கும் போரில், தங்களது நாட்டை ராணுவத்தைச் சேர்ந்த மூன்று வீரர்கள் கொல்லப்பட்டு உள்ளதாக இஸ்ரேல் தெரிவித்து உள்ளது.
ஆனால், இதனை ஏற்க மறுத்துள்ள ஐ.நா., மனித உரிமைகள் அமைப்பானது, இந்த தாக்குதல் குறித்து பாரபட்சமற்ற முறையில் விசாரணை நடத்த வேண்டும். சாமானிய மக்கள் மீது தாக்குதல் நடத்துவது என்பது சர்வதேச சட்டங்களை மீறிய செயல் எனவும், இது போர் குற்றம் எனவும் தெரிவித்துள்ளது.