3 ஹிந்து கோவில்கள் மீது தாக்குதல்: வங்கதேசத்தில் பதற்றம்
3 ஹிந்து கோவில்கள் மீது தாக்குதல்: வங்கதேசத்தில் பதற்றம்
UPDATED : நவ 27, 2024 05:45 PM
ADDED : நவ 27, 2024 05:29 PM

சட்டோகிராம்: வங்கதேசத்தில் உள்ள சட்டோகிராமில் ஹிந்து கோவில்கள் மீது, வன்முறை கும்பல் குறிவைத்து தாக்குதல் நடத்துவதால் பதற்றம் நீடிக்கிறது.
வங்க தேசத்தில் 'சம்மிலிதா சனாதனி ஜோதே' என்ற ஹிந்து அமைப்பின் சின்மாய் கிருஷ்ண தாஸ் பிரம்மச்சாரி கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் சிறுபான்மை ஹிந்துக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சின்மாய் கிருஷ்ண தாஸ், ஏற்கனவே இஸ்கான் தலைவராக இருந்ததால், இஸ்கான் உள்ளிட்ட பல்வேறு ஹிந்து அமைப்புகள், தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் சட்டோகிராமில் பிரங்கி பஜாரில் உள்ள லோகோநாத் கோவில், மான்சா மாதா கோவில் மற்றும் ஹசாரி லேனில் உள்ள காளி மாதா கோவில் ஆகிய
மூன்று கோவில்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இது குறித்துஇஸ்கான் செய்தித் தொடர்பாளர் ராதாரம் தாஸ், ஹிந்துக் கோவில் மீது கும்பல் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் வீடியோவை பகிர்ந்து,சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளதாவது: 'வங்க தேசத்தில் ஹிந்துக்கள் மற்றும் ஹிந்து வழிபாட்டுத் தலங்கள் மீது தாக்குதல் எப்போது நிறுத்தப்படும்'' என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
அவரது பதிவில் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்டு டிரம்ப், துளசி கபார்ட் ஆகியோரையும் டேக் செய்துள்ளார்.

