sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 31, 2026 ,பங்குனி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

கத்தாரில் எண்ணெய் வளங்கள் மீது தாக்குதல்: ஐரோப்பாவில் காஸ் விலை உயர்வு

/

கத்தாரில் எண்ணெய் வளங்கள் மீது தாக்குதல்: ஐரோப்பாவில் காஸ் விலை உயர்வு

கத்தாரில் எண்ணெய் வளங்கள் மீது தாக்குதல்: ஐரோப்பாவில் காஸ் விலை உயர்வு

கத்தாரில் எண்ணெய் வளங்கள் மீது தாக்குதல்: ஐரோப்பாவில் காஸ் விலை உயர்வு

1


UPDATED : மார் 19, 2026 05:10 PM

ADDED : மார் 19, 2026 05:08 PM

Google News

1

UPDATED : மார் 19, 2026 05:10 PM ADDED : மார் 19, 2026 05:08 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

லண்டன்: கத்தாரில் எண்ணெய் வளங்கள் மீது நடந்த தாக்குதல் காரணமாக, ஐரோப்பாவில் காஸ் விலை அதிகரித்துள்ளது.

மத்திய கிழக்கில் நடக்கும் போர், உலகம் முழுவதும் பொருளாதார பாதிப்புகளை ஏற்படுத்திய வருகிறது. அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக மத்திய கிழக்கு பகுதிகளில் உள்ள நாடுகளில் அமெரிக்க தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.

இன்று கத்தாரில் உள்ள உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலை மீது ஈரான் டிரோன் தாக்குதலை நடத்தியது. இதனைத் தொடர்ந்து, சவுதி அரேபியாவில் உள்ள அராம்கோ எண்ணெய் நிறுவனம் மீதும் ஈரான் டிரோன் மூலம் தாக்குதல் நடத்தி உள்ளது. இதனையடுத்து ஈரானுக்கு அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். இருப்பினும் கத்தாரில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது டிரோன் மூலம் ஈரான் தாக்குதல் நடத்தி உள்ளது. ஈரானின் இந்த தாக்குதலுக்கு வளைகுடா நாடுகள் அனைத்தும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், இந்த தாக்குதல் காரணமாக பிரிட்டனில் காஸ் விலை 23 சதவீதம் உயர்ந்து 171 பவுண்ட் ஆக விற்பனை செய்யப்படுகிறது. ஒட்டுமொத்த ஐரோப்பிய சந்தையிலும் விலை உயர்ந்துள்ளது. மோதல் துவங்குவதற்கு முன்னர் இருந்த விலையை காட்டிலும் இரு மடங்கு அதிகரித்துள்ளது.

ஈரான் எச்சரிக்கை


இதனிடையே, ஈரான் எண்ணெய் வளங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், அமெரிக்காவின் நட்பு நாடுகளில் இருக்கும் எண்ணெய் கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தவோம் என ஈரான் எச்சரித்துள்ளது.






      Dinamalar
      Follow us