தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/உலகம்/சரக்கு கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தினால் விளைவுகள் மோசமாகும்; ஜே.டி.வான்ஸ்

சரக்கு கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தினால் விளைவுகள் மோசமாகும்; ஜே.டி.வான்ஸ்

சரக்கு கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தினால் விளைவுகள் மோசமாகும்; ஜே.டி.வான்ஸ்

1

ADDED : ஜூலை 09, 2026 08:31 AM

Follow on GoogleFavourite on Google

1

ADDED : ஜூலை 09, 2026 08:31 AM

1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வாஷிங்டன்: ஹார்முஸ் ஜலசந்தியில் செல்லும் சரக்கு கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தினால், கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

போர் நிறுத்தம் முடிவுக்கு வந்து விட்டதாக அதிபர் டிரம்ப் அறிவித்த பிறகு, அமெரிக்கா - ஈரான் இடையே தாக்குதல் தீவிரமடைந்துள்ளது. இந்த நிலையில், ஈரானுக்கு துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது; ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியில் பயணிக்கும் சரக்கு கப்பல்கள் மீது தாக்குதலை நிறுத்தினால், நாங்கள் அவர்கள் மீதான முற்றுகையை நிறுத்துவோம். ஆனால் ஈரான் கப்பல்கள் மீது தாக்குதலை நடத்தினால், நாங்கள் திருப்பி அடிப்போம். அதுவும் முன்பை விடக் கடுமையாகத் திருப்பி அடிசரக்கு கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தினால் விளைவுகள் மோசமாகும்; ஜே.டி.வான்ஸ்

வாஷிங்டன்: ஹார்முஸ் ஜலசந்தியில் செல்லும் சரக்கு கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தினால், கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

போர் நிறுத்தம் முடிவுக்கு வந்து விட்டதாக அதிபர் டிரம்ப் அறிவித்த பிறகு, அமெரிக்கா - ஈரான் இடையே தாக்குதல் தீவிரமடைந்துள்ளது. இந்த நிலையில், ஈரானுக்கு துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது; ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியில் பயணிக்கும் சரக்கு கப்பல்கள் மீது தாக்குதலை நிறுத்தினால், நாங்கள் அவர்கள் மீதான முற்றுகையை நிறுத்துவோம். ஆனால் ஈரான் கப்பல்கள் மீது தாக்குதலை நடத்தினால், நாங்கள் திருப்பி அடிப்போம். அதுவும் முன்பை விடக் கடுமையாகத் திருப்பி அடிப்போம். இப்படித்தான் ஈரானுடன் ஒப்பந்தம் போடப்பட்டது.

ஆனால், தாக்குதல்களை நிறுத்த ஒப்புக்கொண்ட போதிலும், ஈரான் மீண்டும் கப்பல்கள் மீது தாக்குதலை நடத்தியுள்ளது. எனவே நாங்கள் அவர்களை துவம்சம் செய்வோம். அதிபரிடம் பல வழிமுறைகள் உள்ளன. இன்று இரவு என்ன நடக்கப் போகிறது என்பதை நான் இப்போது உங்களுக்குத் தெளிவாகக் கூறப் போவதில்லை,

ஹார்முஸ் ஜலசந்தி திறந்தே இருக்கும். அதாவது அமெரிக்க மக்களுக்குத் தடையின்றி கச்சா எண்ணெயும், எரிவாயுவும் கிடைக்கும், இவ்வாறு கூறினார்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow

      Dinamalar
      Follow us