ஆஸ்திரேலியா துப்பாக்கி கட்டுப்பாடு சட்டம் நிறைவேறியது
ஆஸ்திரேலியா துப்பாக்கி கட்டுப்பாடு சட்டம் நிறைவேறியது
ADDED : ஜன 22, 2026 12:39 AM
சிட்னி: ஆஸ்திரேலியாவில், பொதுமக்களிடம் இருக்கும் அதிகப்படியான துப்பாக்கிகளை, வாங்கி அழிக்கும் மசோதா, அந்நாட்டு பார்லிமென்டில் நிறைவேறியது.
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள பாண்டை கடற்கரையில் கடந்த மாதம், யூதர்களின், 'ஹனுக்கா' பண்டிகையின்போது, துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த தந்தை-மகன் நடத்திய தாக்குதலில், 15 பேர் கொல்லப்பட்டனர்.
இதையடுத்து, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனீஸ், துப்பாக்கி பயன்பாட்டிற்கான சட்டங்களை கடுமையாக்க முடிவு செய்தார். அதன்படி, அரசு நிதியுதவியுடன் மக்களிடமிருந்து துப்பாக்கிகளை வாங்கி அழிப்பது, ஒருவருக்கு நான்கு துப்பாக்கிகள் மட்டுமே அனுமதி என, பல்வேறு கட்டுப்பாடுகளை கொண்ட மசோதா, அந்த நாட்டின் பார்லிமென்டில் நிறைவேறியுள்ளது.
இதனுடன், இனம், மதத்திற்கு எதிரான வெறுப்பு பேச்சுகளை துாண்டுவதற்கு எதிராகவும் பார்லிமென்ட்டில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

