தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/உலகம்/பிளைதுபாய் விமானத்தில் நடந்த சம்பவம்; முழுமையான விசாரணைக்கு குழு அமைத்தது யுஏஇ

பிளைதுபாய் விமானத்தில் நடந்த சம்பவம்; முழுமையான விசாரணைக்கு குழு அமைத்தது யுஏஇ

பிளைதுபாய் விமானத்தில் நடந்த சம்பவம்; முழுமையான விசாரணைக்கு குழு அமைத்தது யுஏஇ

1


UPDATED : அக் 01, 2026 08:00 PM

ADDED : அக் 01, 2026 07:11 PM

Follow on GoogleFavourite on Google

1

UPDATED : அக் 01, 2026 08:00 PM ADDED : அக் 01, 2026 07:11 PM


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

துபாய்: பிளைதுபாய் விமானத்தில் நடந்த பயங்கர சம்பவம் தொடர்பான முழுமையான விசாரணைக்கு ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ) உத்தரவிட்டுள்ளது.

துபாயில் இருந்து இஸ்ரேல் நோக்கிச் சென்ற பிளைதுபாய் விமானத்தை நடுவானில் விபத்துக்குள்ளாக்க முயன்ற சம்பவம் குறித்து, பயங்கரவாதச் சதி அல்லது முன்கூட்டியே திட்டமிடப்பட்ட தாக்குதலா என்ற கோணத்தில் விசாரணையை யுஏஇ துவங்கி உள்ளது. இந்த சம்பவத்தில் பயங்கரவாத அமைப்புகளின் தொடர்பு உள்ளதா, முன்கூட்டியே திட்டமிடப்பட்ட சதி அல்லது தூண்டுதல் உள்ளதா என்பதை ஆராய யுஏஇ அரசு குழு அமைத்து உள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் சிறப்புப் பொதுத்துறை வழக்கறிஞர் குழு இது தொடர்பான விரிவான விசாரணையை முடுக்கிவிட்டு உள்ளது. 'சர்வதேசச் சட்டங்களின்படி இந்த விவகாரத்தை விசாரிக்க தங்களுக்கு முழு அதிகாரம் உள்ளது. இச்சம்பவம் குறித்து பொதுமக்கள் மற்றும் ஊடகங்கள் அதிகாரப்பூர்வமற்ற தகவல்களையோ, வதந்திகளையோ பரப்ப கூடாது; விசாரணை முடிவுகள் விரைவில் வெளிப்படையாக அறிவிக்கப்படும்' என்று யுஏஇ அரசு தெரிவித்துள்ளது.

விசாரணை முழுமையாக முடிந்து, அனைத்து உண்மைகளும் கண்டறியப்படும் வரை, இஸ்ரேல் நாட்டுக்கான தங்களின் அனைத்து விமானச் சேவைகளையும் பிளைதுபாய் நிறுவனம் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us