டுவிஸ்ட் ...! ஷேக் ஹசீனாவின் உறவினரா வங்கதேச ராணுவ தளபதி...? யப்பா.. இதுதான் ஸ்கெட்ச்..!
டுவிஸ்ட் ...! ஷேக் ஹசீனாவின் உறவினரா வங்கதேச ராணுவ தளபதி...? யப்பா.. இதுதான் ஸ்கெட்ச்..!
UPDATED : ஆக 06, 2024 12:36 PM
ADDED : ஆக 06, 2024 12:24 PM

டாக்கா; பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டு தப்பி ஓடிய ஷேக் ஹசீனாவின் உறவினர் தான் ராணுவ தலைமை தளபதி வாக்கர் உஸ் ஜமான் என்ற புதிய தகவல் சர்வதேச அரசியல் அரங்கை அதிர வைத்துள்ளது.
அரசியல் நெருக்கடி
வங்கதேச அரசியல் நெருக்கடி உலக நாடுகளை உற்று பார்க்க வைத்துள்ளது. அண்டை நாடான இந்தியாவும் அங்கு நிலவி வரும் அரசியல் சூழல்களை உன்னிப்பாக கவனித்து வருகிறது.
புதிய தகவல்
இப்படி ஒரு இடியாப்ப சிக்கல் வருமா? என்று எதிர்பாராத தருணத்தில் வங்கதேசம் தொங்கல்தேசமாக மாறிவிட்டது என்று அரசியல் விமர்சகர்கள் கருத்துகளை விமர்சனங்களாக பொது ஊடகத்தில் முன்வைத்துக் கொண்டு இருக்க, வேறு ஒரு புதிய தகவல் அனைத்தையும் பின்னோக்கி நகர்த்தி வைத்துள்ளது.
அந்த 45 நிமிடங்கள்
அதிகாரமிக்க ஒரு பிரதமரையே நாட்டை விட்டு போகுமாறு சொல்லிய வங்கதேச ராணுவ தலைமை தளபதி வாக்கர் உஸ் ஜமான் யார்? என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. 45 நிமிடங்கள் மட்டுமே உங்களுக்கு தரப்பட்டு உள்ளது என்று ஷேக் ஹசீனாவுக்கு கெடு விதித்த அவர் வேறு யாருமல்ல... நாட்டை விட்டு தப்பி ஓடிய ஷேக் ஹசீனாவின் உறவினர் என்பதுதான் உலக நாடுகளை மொத்தமாக அதிர்ச்சிக்கு ஆளாக்கி உள்ளது.
ஹசீனா உறவினர்
கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் அனுபவம் மிக்க வாக்கர் உஸ் ஜமான், 1966ம் ஆண்டு டாக்காவில் பிறந்தவர். லண்டனில் உயர்கல்வி பயின்ற அவர், ராணுவ ஜெனரல் முகமது முஸ்தாபிசுர் ரகுமான் மகளை திருமணம் முடித்தார். முகமது முஸ்தாபிசுர் ரகுமான், முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மாமா உறவுமுறையை கொண்டவர்.
2 மாதங்களில் சிக்கல்
3 ஆண்டுகால வங்கதேசத்தின் ராணுவ தலைமை தளபதியாக, கடந்த ஜூன் மாதம் 23ம் தேதி தான் பொறுப்பேற்றார். அவர் பதவிக்கு வந்த 2 மாதங்களுக்குள் எதிர்பாராத அரசியல் சிக்கல்கள் எழுந்து இருக்கின்றன. ஷேக் ஹசீனாவின் உறவினர் என்ற தகவலும், அவரின் செயல்பாடுகள் பற்றியும் இணைய ஊடகங்களில் செய்திகள் பரவி இருக்க, வேறு விதமான கருத்துகளும் முன் வைக்கப்பட்டு வருகின்றன.
தப்பியோட்டம்
ஹசீனாவின் உறவினர் என்பதாலேயே, கடும் நெருக்கடியில் இருந்து அவரை காப்பாற்ற பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய சொல்லி வலியுறுத்தி இருக்கிறார், நாட்டில் இருந்த தப்பியோடவும் உதவியாக இருந்திருக்கிறார் என்றும் கூடுதல் தகவல்கள் வெளியாகி உள்ளன.
சாதகமில்லை
உறவினர் என்பதை நம்பியே ராணுவ தலைமை தளபதியாக ஜமான் நியமிக்கப்பட்டார் என்றும், ஆனால் ஹசீனாவின் முதுகில் குத்தி விட்டார் என்றும் ஒரு தகவல் அந்நாட்டினர் மத்தியில் பரவி வருகிறது.