ஹிந்துக்களால் தொடர் பதற்றம்: இந்திய தூதருக்கு வங்கதேச அரசு சம்மன்
ஹிந்துக்களால் தொடர் பதற்றம்: இந்திய தூதருக்கு வங்கதேச அரசு சம்மன்
ADDED : டிச 03, 2024 07:08 PM

புதுடில்லி: வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், இது குறித்து வங்கதேச இந்திய தூதருக்கு அந்நாட்டு அரசு சம்மன் அனுப்பியுள்ளது.
வங்க தேசத்தில் ஹிந்துக்கள் மீதான தாக்குதல்களை கண்டித்து வங்கதேசத்தில் உள்ள இஸ்கான்' எனப்படும் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் முன்னாள் நிர்வாகி. சின்மாய் கிருஷ்ண தாஸ் பிரம்மச்சாரி தலைமையில் கடந்த மாதம் ஹிந்து அமைப்பினர் நடத்திய ஊர்வலத்தின் போது, வங்கதேச தேசிய கொடியை அவமதித்ததாக அந்நாட்டு போலீசாரால் கிருஷ்ண தாஸ் கைது செய்யப்பட்டார்.அவர் மீது தேச துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இதை கண்டித்து சின்மாய் கிருஷ்ண தாஸ் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் வன்முறையாக மாறியதால் வங்க தேசம் முழுதும் பதற்றம் நிலவுகிறது.
இந்நிலையில் வங்கதேச நாட்டிற்கான இந்திய தூதர் பிரணாய் வர்மாவுக்கு சம்மன் அனுப்பி தனது கண்டனத்தை பதிவு செய்தது. இது தொடர்பாக வங்க தேசத்தில் இருந்து வெளிவரும் பி.எஸ்.எஸ். எனப்படும் பங்களாதேஷ் சங்க்பாத் சங்கஸ்தா என்ற செய்தி நிறுவனத்திற்கு வெளியுறவு அமைச்சக அலுவலக ஆலோசகர் தவூஹித் ஹூசைன் அளித்துள்ள பேட்டி,
வங்கதேச வெளியுறவு அமைச்சக செயலர் ரியாஸ் ஹமீதுல்லா இந்திய ஹைகமிஷனர் பிரணாய் வர்மாவுக்கு சம்மன் இன்று (டிச..03) அனுப்பியுள்ளார். அதில் வங்கதேச ஹிந்துக்களால் ஏற்பட்டுள்ள பதற்றம் காரணமாக அண்டை நாடான இந்தியாவின் நட்புறவில் பாதிப்பு ஏற்படும் சூழல் உள்ளதாக தெரிவித்துள்ளார்.