வங்க தேச இடைக்கால அரசின் ஆலோசகர் இன்று (ஆக.08) பொறுப்பேற்பு
வங்க தேச இடைக்கால அரசின் ஆலோசகர் இன்று (ஆக.08) பொறுப்பேற்பு
UPDATED : ஆக 08, 2024 03:10 AM
ADDED : ஆக 07, 2024 06:15 PM

டாக்கா: வங்கதேசத்தில் இடைக்கால அரசின் தலைமை ஆலோசகராக முகமது யூனுஸ் இன்று (ஆக.08) பொறுப்பேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாணவர் போராட்டத்தால் பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்து, நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளதையடுத்து வங்கதேச பார்லிமென்டை கலைப்பதாக அதிபர் முகமது ஷகாபுதீன் உத்தரவு பிறப்பித்தார். அதிகாரத்தை கைப்பற்றியுள்ள ராணுவ தளபதி, இடைக்கால அரசு அமைக்கும் முயற்சியை துவங்கியுள்ளார்.
இடைக்கால அரசு அமைப்பது தொடர்பாக அரசில் ராணுவத்தினர் இடம்பெற கூடாது; எந்த கட்சியின் பிரதிநிதியும் இருக்கக் கூடாது; அரசியல் மற்றும் ராணுவத்தை சாராத பொதுமக்கள் பிரதிநிதிகள் மட்டுமே அரசில் பொறுப்பேற்க வேண்டும் உள்ளிட்ட பல நிபந்தனைகள் விதித்துள்ளது.
இதையடுத்து 2006ல் நோபல் பரிசு வென்ற பேராசிரியர் முகமது யூனுஸ் இடைக்கால அரசின் தலைமை ஆலோசகராக பொறுப்பேற்க அழைக்கப்பட்டுள்ளார். இன்று (ஆக. 08) இடைக்கால அரசின் ஆலோசகராக அவர் பொறுப்பேற்க உள்ளார்.