உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : மார் 07, 2026 01:25 AM
அ நிறம் | அளவு
தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியாவிலும், 16 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இது உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.
இது குறித்து, அந்நாட்டின் தகவல் தொடர்பு துறை அமைச்சர் மியுட்டியா ஹபிட், ''வரும் 28 முதல், 'யூ டியூப், டிக் டாக், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்' உள்ளிட்ட சமூக ஊடகங்களில், சிறார்களின் கணக்குகள் படிப்படியாக முடக்கப்படும். அரசு விதிகளுக்கு இணங்காத ஊடகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
