உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஆக 29, 2026 08:41 AM

அ நிறம் | அளவு
இந்திய வார்த்தைகளை கொரியர்கள் உச்சரிக்கும் போது, என்ன குளறுபடி நடக்கும் என்பதற்கு இப்போதைய வாசலைன், பேஸ்லைன் விவ காரமே சாட்சி. தென் கொரியாவை சேர்ந்த சோஷியல் மீடியா பிரபலம் மின் டே லீ என்பவர், 'வாசலைன்' என்ற பிராண்டை, தவறாக 'பேஸ் லைன்' என்று உச்சரிக்க, அதுவே காற்று போல பரவி விட்டது. ஒருவர் மாற்றி ஒருவர் என பலரும் கேலி, கிண்டல் செய்ய, 'இன்ஸ்டாகிரா மில்' 3.6 கோடி பார்வைகள் பெற்றது, அந்த தவறான உச்சரிப்பு வீடியோ.
வாசலைன் இப்போ பேஸ்லைன்
இந்த, 'ஓசி' விளம்பரத்தை தனக்கு பயன்படுத்திக் கொள்ள எண்ணிய 'வாசலைன்' நிறுவனம், 'நாங்கள் எங்களை, 'பேஸ்லைன்' ஆக, 'ரீபிராண்ட்' செய்து கொள்கிறோம்' என்றும், 'பேஸ்லைன் நிறுவனத்தின் சி.இ.ஓ., இனி, மின் டே லீ தான்' என்று, ஹாஸ்யமாக பதிவிட்டுள்ளது.
