அய்யய்யோ, அச்சுறுத்தல்... அலறித் துடிக்கிறார் டிரம்ப்; யாரைச் சொல்றார்னு பாருங்க!
அய்யய்யோ, அச்சுறுத்தல்... அலறித் துடிக்கிறார் டிரம்ப்; யாரைச் சொல்றார்னு பாருங்க!
UPDATED : செப் 25, 2024 01:05 PM
ADDED : செப் 25, 2024 01:01 PM

வாஷிங்டன்: 'ஈரானால் என் உயிருக்கு பெரிய அச்சுறுத்தல் உள்ளது' என அமெரிக்கா முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.
கடந்த ஜூலை 13ம் தேதி பென்சில்வேனியாவில் நடந்த பிரசார கூட்டத்தில் டொனால்டு டிரம்ப் பேசிக் கொண்டிருந்த போது கூட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடந்தது. காது பகுதியில் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக டிரம்ப் உயிர் தப்பினார். கடந்த செப்டம்பர் 16ம் தேதி, 2வது முறையாக புளோரிடா மாகாணத்தில் தனது வீட்டில் இருக்கும் கோல்ப் மைதானத்தில் டிரம்ப் விளையாடி கொண்டிருந்தார். அப்போது அவர் வீட்டிற்கு அருகிலேயே துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்தது.
ஆபத்து இருக்குது!
தொடர்ந்து நடந்து வரும் கொலை முயற்சி தாக்குதலில், இருந்து கடவுள் தான் என்னை காப்பாற்றினார் என அவர் தெரிவித்து இருந்தார். இந்நிலையில், இன்று(செப்.,25) அவர் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'ஈரானால் எனது உயிருக்கு பெரிய அச்சுறுத்தல்.
ஏற்கனவே அவர்கள் மேற்கொண்ட முயற்சி கை கொடுக்கவில்லை. ஆனால் மீண்டும் முயல்வர். ஒட்டுமொத்த அமெரிக்க ராணுவமும் பார்த்துக்கொண்டு காத்திருக்கிறது. யாருக்கும் நல்ல சூழ்நிலை இல்லை. இதுவரை நான் பார்க்காத அளவுக்கு என்னைச் சுற்றி துப்பாக்கிகளும், ஆயுதங்களும் உள்ளன' என குறிப்பிட்டுள்ளார்.