ADDED : ஜன 20, 2026 07:01 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காபூல்: தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலின் வர்த்தக மையமான ஷாரேநா பகுதியில் உள்ள சீன உணவகத்தில், நேற்று மாலை சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது.
வர்த்தக வளாகங்கள், அலுவலகங்கள் அமைந்துள்ள இந்தப் பகுதி, மிகவும் பாதுகாப்பான பகுதிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. மேலும், வெளிநாட்டவர் இந்தப் பகுதியில் அதிகம் வசிக்கின்றனர்.
சீன உணவகத்தில் நடந்த குண்டு வெடிப்பில், ஏழு பேர் உயிரிழந்ததாகவும், இரண்டு சீனர்கள் உட்பட, 13 பேர் காயமடைந்ததாகவும், தலிபான் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பேற்க வில்லை.

