UPDATED : ஜன 28, 2026 01:46 PM
ADDED : ஜன 28, 2026 04:50 AM

அமெரிக்காவில் கடந்த, 22ம் தேதி துவங்கிய, பனிப்புயல் பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
* 29 - பனிப்புயலில் சிக்கி உயிரிழந்தோர்
* 8,00,000 - நாடு முழுதும் மின்சாரம் இல்லாமல் பாதிக்கப்பட்டோர்
* மைனஸ் 17 - டென்னசி மாகாணம் தலைநகர் நாஷ்விலேயில் பதிவான வெப்பநிலை (டிகிரி செல்ஷியஸ்)
* 17 - ஆர்கன்சாஸ் மாகாணத்தில் லிட்டில் ராக் விமான நிலையத்தில் பதிவான ஆலங்கட்டி மழை (செ.மீ.,ல்)
* 56.4 - மாசசூசெட்ஸ் மாகாணத்தில் ஸ்டெர்லிங் பகுதியில் பதிவான பனிப்பொழிவு (செ.மீ.,ல்)
* 50.8 - பிட்ஸ்பர்க்கின் வடக்கு
பகுதிகளில் பதிவான பனிப்பொழிவு (செ.மீ.,ல்)
* 47 - நாஷ்விலேயில் மின்தடையால் தீயணைப்பு நிலையங்கள், போலீஸ் ஸ்டேஷன்களில் போன் சார்ஜ் செய்ய ஏற்பாடு செய்யப்பட்ட இடங்கள்
* 15,000 - வார இறுதி முழுதும் ரத்து செய்யப்பட்ட விமான சேவைகள்
* 20 - அவசரநிலை அறிவிக்கப்பட்ட மாகாணங்கள்
* 2,100 - ஆர்கன்சஸ் முதல் நியூ இங்கிலாந்து வரை, குறைந்தது ஒரு அடி அளவுக்கு பனி சூழ்ந்த பகுதிகள் (கி.மீ.,ல்).
