sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/உலகம்/ 'புளூ ஆரிஜின்' நிறுவனத்தின் ராக்கெட் வெடித்து சிதறியது

 'புளூ ஆரிஜின்' நிறுவனத்தின் ராக்கெட் வெடித்து சிதறியது

 'புளூ ஆரிஜின்' நிறுவனத்தின் ராக்கெட் வெடித்து சிதறியது


ADDED : மே 30, 2026 03:03 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 30, 2026 03:03 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கேப் கனாவெரல்: 'அமேசான்' நிறுவனர் ஜெப் பெசோசின் விண்வெளி நிறுவனமான, புளூ ஆரிஜினுக்கு சொந்தமான ராக்கெட் ஒன்று இன்ஜின் சோதனை ஓட்டத்தின் போது ஏவுதளத்திலேயே வெடித்து சிதறியது.

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரும், உலகப் பணக்காரர்களில் ஒருவருமான ஜெப் பெசோஸ், உலகின் மிகப்பெரிய ஆன்லைன் வர்த்தக நிறுவனமான, 'அமேசான்' நிறுவனத்தை நடத்தி வருகிறார். விண்வெளி துறை மீதான ஆர்வத்தால், 2000ல், 'புளூ ஆரிஜின்' என்ற விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தை அவர் தொடங்கினார். இதன் வாயிலாக, 'நியூ கிளென்' என்ற பிரமாண்ட ராக்கெட்டுகளை உருவாக்கி வருகிறார்.

அடுத்த வாரம் திட்டமிடப்பட்டிருந்த செயற்கைக்கோள் ஏவுதலுக்கு முன்னதாக, 'நியூ கிளென்' ராக்கெட்டின் இன்ஜின் சோதனையை, 'புளூ ஆரிஜின்' நிறுவனம் மேற்கொள்ள முடிவு செய்தது. இதையடுத்து, அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள கேப் கானவெரல் விண்வெளி ஏவுதளத்தில், ராக்கெட்டின் ஏழு இன்ஜின்களும் இயக்கி சோதனை நடந்தது.

சில வினாடிகளிலேயே, 321 அடி உயரம் கொண்ட அந்த ராக்கெட்டின் அடிப்பகுதியில் ஏற்பட்ட கோளாறால், ஒட்டுமொத்த ராக்கெட்டும் வெடித்து சிதறியது. இதனால் ஏற்பட்ட அதிர்வுகள், அருகே உள்ள பகுதிகளில் உணரப்பட்டன-.

இந்த விபத்தில் யாருக்கும் எந்த காயமும் காயமும் ஏற்படவில்லை. எலான் மஸ்கின், 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனத்துக்கு போட்டியாக களமிறங்கிய ஜெப் பெசோசின் விண்வெளி நிறுவனத்துக்கு இச்சம்பவம் பின்னடைவாக கருதப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us