தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/உலகம்/ பலுாசிஸ்தானில் வெடிகுண்டு தாக்குதல் போக்குவரத்து பாதிப்பு; முழு ஊரடங்கு

பலுாசிஸ்தானில் வெடிகுண்டு தாக்குதல் போக்குவரத்து பாதிப்பு; முழு ஊரடங்கு

பலுாசிஸ்தானில் வெடிகுண்டு தாக்குதல் போக்குவரத்து பாதிப்பு; முழு ஊரடங்கு


ADDED : ஆக 24, 2026 08:12 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 24, 2026 08:12 PM


Follow on Google
அ நிறம் | அளவு

இஸ்லாமாபாத், ஆக.25–

பாகிஸ்தானில் பலுாச் விடுதலைப் படையினர் பல்வேறு இடங்களில் நடத்திய வெடிகுண்டு தாக்குதல்களில், பாலங்கள், சாலைகள் சேதமடைந்து போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.

நம் அண்டை நாடான பாகிஸ்தானில் உள்ள மிகப்பெரிய மாகாணமான பலுாசிஸ்தானை தனி நாடாக அறிவிக்கக்கோரி, அந்த மாகாணத்தைச் சேர்ந்த, பலுாச் விடுதலைப் படை என்ற அமைப்பு போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, அரசுக்கு எதிராக, தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். மாஸ்டுங் பகுதியில், நேற்று பல்வேறு இடங்களில் வைக்கப்பட்ட குண்டுகள் வெடித்து பல இணைப்பு பாலங்கள் முழுமையாக சேதமடைந்தன.

மேலும் குவெட்டா மற்றும் கராச்சியை இணைக்கும் முக்கியமான தேசிய நெடுஞ்சாலையில் பாதுகாப்புப் படையினருக்கும், பலுாச் விடுதலைப் படையினருக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பல மணிநேரமாக முடங்கியது.

பாதுகாப்பு காரணங்களைக் கருத்தில் கொண்டு காத்கோச்சா மற்றும் மாஸ்டுங் பகுதிகளில் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர். அப்பகுதியில் கூடுதல் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டு, தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

சிந்து மாகாணத்திலும் வெடித்தது போராட்டம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடைபெற்று வரும் போராட்டங்களுக்கு மத்தியில், தற்போது சிந்து மாகாணத்திலும் புதிய பிரச்னை எழுந்துள்ளது. நிலம், நீர் மற்றும் வளங்களை பாதிக்கும் புதிய மாகாணங்கள் உருவாக்கம் மற்றும் திட்டங்களுக்கு எதிராக அரசியல் அமைப்புகளும் பொதுமக்களும் வீதிகளில் இறங்கி, போராடி வருகின்றனர். சிந்து நடவடிக்கைக் குழு என்ற அமைப்பின் சார்பில், அங்குள்ள ஐதராபாத் பகுதியில் மாபெரும் பேரணி நடத்தப்பட்டது.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us