நைஜீரியாவில் 3 இடங்களில் குண்டுவெடிப்பு: 18 பேர் பலி
நைஜீரியாவில் 3 இடங்களில் குண்டுவெடிப்பு: 18 பேர் பலி
ADDED : ஜூன் 30, 2024 11:03 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போர்னோ: நைஜீரியாவில் 3 இடங்களில் நடந்த குண்டுவெடிப்பில், 18 பேர் உயிரிழந்தனர். 48 பேர் காயமடைந்தனர்.
அந்நாட்டின் வடகிழக்கு பகுதியில் உள்ள போர்னோ மாநிலத்தில் திருமண நிகழ்ச்சி, மருத்துவமனை மற்றும் இறுதிச்சடங்கு ஒன்றில் குண்டுவெடித்தது. இச்சம்பவத்தில் 18 பேர் உயிரிழந்தனர். 48 பேர் கொல்லப்பட்டனர்.
பலர் ஆபத்தான நிலையில் உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. உயிரிழந்தவர்களில் குழந்தைகளும் அடக்கம். அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.