பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு; குழந்தைகள் 5 பேர் உட்பட 7 பேர் பரிதாப பலி
பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு; குழந்தைகள் 5 பேர் உட்பட 7 பேர் பரிதாப பலி
UPDATED : நவ 01, 2024 02:03 PM
ADDED : நவ 01, 2024 01:48 PM

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் நடந்த குண்டு வெடிப்பில், குழந்தைகள் 5 பேர் உட்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில், பெண்கள் உயர்நிலை பள்ளி ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த பள்ளிக்கு அருகே இன்று மர்ம நபர்கள் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தினார்.
இந்த தாக்குதலில், பள்ளி குழந்தைகள் 5 பேர் உட்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 22 பேர் பலத்த காயமுற்றனர். காயம் அடைந்தவர்களில் பெரும்பான்மையானவர்கள் பள்ளி மாணவர்கள் ஆவர். சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
மோட்டார் சைக்கிளில் பொருத்தப்பட்டிருந்த, ஐ.இ.டி., வகை குண்டை வெடிக்க செய்து மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியது போலீசார் விசாரணையில் அம்பலமானது. இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்திய மர்ம நபர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.