சிரியா மசூதியில் தொழுகையின் போது குண்டு வெடிப்பு; 8 பேர் பலி; 18 பேர் காயம்
சிரியா மசூதியில் தொழுகையின் போது குண்டு வெடிப்பு; 8 பேர் பலி; 18 பேர் காயம்
UPDATED : டிச 26, 2025 08:45 PM
ADDED : டிச 26, 2025 07:46 PM

டமாஸ்கஸ்: சிரியாவின் ஹோம்ஸில் உள்ள மசூதியில் தொழுகையின் போது ஏற்பட்ட குண்டுவெடிப்பில் 8 பேர் கொல்லப்பட்டனர், 18 பேர் காயம் அடைந்தனர்.
மேற்கு ஆசிய நாடான சிரியாவின் ஹோம்ஸ் நகரில் மசூதி உள்ளது. இங்கு ஏராளமானோர் தொழுகையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது திடீரென குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த தாக்குதலில் 8 பேர் உயிரிழந்தனர்.
மேலும் 18 பேர் அடைந்துள்ளனர் என சிரியா சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. படுகாயம் அடைந்து மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருபவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இது பயங்கரவாத தாக்குதல் என சிரியாவின் உள்துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது. வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகையின் போது மசூதியில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

