பேட்ஸ்மேனே இல்லாமல் பந்து வீசி போல்டு... வித்தியாசமான முறையில் அவுட்டான டாட்டின்!
பேட்ஸ்மேனே இல்லாமல் பந்து வீசி போல்டு... வித்தியாசமான முறையில் அவுட்டான டாட்டின்!
ADDED : நவ 25, 2026 06:02 PM

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் மகளிருக்கான பிக்பேஸ் டி20 கிரிக்கெட் லீக் போட்டி நடந்து வருகிறது. மெல்போர்ன் ரெனிகேட்ஸ், பிரிஸ்பேன் ஹீட் அணிகள் மோதின. அப்போது, மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி வீராங்கனை டாட்டின் ஒரு பந்துகூட பிடிக்காமல், வித்தியாசமான முறையில் ஆட்டமிழந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
முதலில் பேட் செய்த பிரிஸ்பேன் ஹீட் அணி 138 ரன் குவித்தது. தொடர்ந்து பேட் செய்த மெல்போர்ன் அணி 14.1 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 97 ரன் எடுத்திருந்தது. 35 பந்தில் 41 ரன் தேவைப்பட்ட போது, டாட்டின் புது பேட்டராக களத்திற்கு வந்தார்.
ஆனால், அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்து, அவர் கிரீஸூக்கு வந்ததால், அவரை நேரடியாக 'டைம்ட் அவுட்' முறையில் ஆட்டமிழக்கச் செய்வதற்குப் பதிலாக, விதிமுறையின்படி ஒரு பந்தை எதிர்கொள்ள அனுமதிக்கப்படவில்லை. அதாவது, பேட்டர் இல்லாமல் பவுலர் பந்தை வீச வேண்டும் (Free Ball). அது ஸ்டம்பில் படாமல் சென்றால், டாட்டின் 2வது பந்தில் இருந்து பேட் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், சாரா க்ளென் துல்லியமாக பந்தை ஸ்டம்பில் வீசினார். இதனால், டாட்டின் ஒருபந்தை கூட எதிர்கொள்ளாமல் ஆட்டமிழந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அரிய நிகழ்வாக டாட்டின் விக்கெட்டை இழந்தது சமூகவலைதளங்களில் பேசு பொருளாகியுள்ளது.
இந்தப் போட்டியில் மெல்போர்ன் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, புள்ளிப்பட்டியலில் 4வது இடத்திற்கு முன்னேறியது. பிரிஸ்பேன் 5வது இடத்திற்கு தள்ளப்பட்டது.
