sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 09, 2026 ,மாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

"பயங்கரவாதிகளுக்கு சாதகமான சூழல் அமெரிக்காவில் இல்லை'

/

"பயங்கரவாதிகளுக்கு சாதகமான சூழல் அமெரிக்காவில் இல்லை'

"பயங்கரவாதிகளுக்கு சாதகமான சூழல் அமெரிக்காவில் இல்லை'

"பயங்கரவாதிகளுக்கு சாதகமான சூழல் அமெரிக்காவில் இல்லை'


ADDED : செப் 08, 2011 11:43 PM

Google News

ADDED : செப் 08, 2011 11:43 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாஷிங்டன்: 'பயங்கரவாதிகளுக்கு ஏற்ற சூழ்நிலை, அமெரிக்காவில் தற்போது இல்லை' என, அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில், இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்ட, 10ம் ஆண்டு நினைவு தினம், நாளை மறுநாள் அனுசரிக்கப்பட உள்ளது.

இது குறித்து, அமெரிக்க தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகர் ஜான் பெர்னான் கூறியதாவது: அல்-குவைதா தலைவர் ஒசாமா பின் லாடன், சுட்டுக் கொல்லப்பட்ட போது, அவர் தங்கியிருந்த வீட்டிலிருந்து, சில ஆவணங்கள் கண்டெடுக்கப்பட்டன. இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்ட, 10ம் ஆண்டு நினைவு தினத்தன்று, மீண்டும் ஒரு தாக்குதலை, அவர் நடத்த திட்டமிட்டது, அந்த ஆவணங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. மீண்டும் அவர்கள் தாக்குதல் நடத்துவார்கள் என்பது, எங்களுக்கும் தெரியும். அவர்கள் இல்லாவிட்டாலும், மற்ற பயங்கரவாத அமைப்புகள் அமெரிக்கா மீது, தாக்குதலை நடத்தலாம் என்பதால், பாதுகாப்புக்கு முதலிடம் கொடுத்து வருகிறோம். காவல் துறையினரும், புலனாய்வுத்துறையினரும் அதிக பட்ச கண்காணிப்புடன் செயல்படுகின்றனர். இதனால், பயங்கரவாதிகளுக்கு ஏற்ற சூழ்நிலை, தற்போது அமெரிக்காவில் இல்லை. பயங்கரவாத நடவடிக்கை அமெரிக்காவில் மட்டுமல்ல, உலகின் எப்பகுதியிலும் இருக்கக்கூடாது, என்பதால், இது தொடர்பாக, மற்றநாடுகளுடனும் நாங்கள் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளோம். இவ்வாறு பெர்னான் கூறினார்.






      Dinamalar
      Follow us