ஆதார் போன்ற டிஜிட்டல் அட்டை அறிமுகம் செய்கிறது பிரிட்டன்
ஆதார் போன்ற டிஜிட்டல் அட்டை அறிமுகம் செய்கிறது பிரிட்டன்
ADDED : செப் 26, 2025 11:03 PM
லண்டன்:சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்கும் முயற்சியாக, நம் நாட்டில் உள்ள ஆதார் போன்ற டிஜிட்டல் அடையாள அட்டை திட்டத்தை அறிமுகப்படுத்த பிரிட்டன் அரசு முடிவு செய்துள்ளது.
ஐரோப்பிய நாடான பிரிட்டனில், சட்ட விரோதமாக குடியேறுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக புகார் எழுந்துள்ளது.
இதை தடுக்க புதிய திட்டம் ஒன்றை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இதன்படி, பிரிட்டன் குடிமக்கள், அங்கு வசிப்பவர்களுக்கு டிஜிட்டல் ஐ.டி., வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
டிஜிட்டல் ஐ.டி, என்பது ஒரு தனிநபரின் அடை யாளத்தின் மின்னணு வடிவமாகும். இந்த ஐ.டி.,யில் ஒருவரின் பெயர், பிறந்த தேதி, பு கைப்படம், நாடு, வசிப்பிட நிலை பற்றிய தகவல்கள் இருக்கும். இந்த டிஜிட்டல் ஐ.டி.,யானது அவரவர் மொபை ல் போன் களிலேயே இருக்கும்.
வெளிநாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு, அவர்கள் வேலை செய்யும் உரிமையை நிரூபிப்பதற்கான கட்டாயமாக இது இருக்கும் என்று அரசு தெரிவித்துள்ளது.
அரசின் இந்த திட்டத்திற்கு, கன்சர்வேடிவ் கட்சி, லேபர் டெமாக்ரேடிவ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதுடன், இது தனிமனித உரிமைக்கு எதிரான செயல் என்று குற்றம்சாட்டியுள்ளன.