பிரிட்டன் மன்னருக்கு அடுத்த வாரம் புராஸ்டேட் வீக்க அறுவை சிகிச்சை :
பிரிட்டன் மன்னருக்கு அடுத்த வாரம் புராஸ்டேட் வீக்க அறுவை சிகிச்சை :
UPDATED : ஜன 18, 2024 11:16 PM
ADDED : ஜன 18, 2024 11:03 PM

லண்டன்: பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸூக்கு அடுத்த வாரம் புராஸ்டேட் வீக்க அறுவை சிகிச்சை நடைபெற உள்ளதாக அரண்மணை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் மறைவையடுத்து அவரது மகன் சார்லஸ் பிரிட்டனின் மன்னராக கடந்த 2022-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டு பின் முறைப்படி மன்னர் மூன்றாம் சார்லஸாக முடிசூட்டிக்கொண்டார். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக மன்னர் மூன்றாம் சார்லஸ் புராஸ்டேட் சுரப்பியில் ஏற்பட்டுள்ள வீக்கம் காரணமாக அவதியுற்று வந்ததாகதாக கூறப்படுகிறது. இதை குணப்படுத்த அடுத்த வாரம் அவருக்கு அறுவை சிகிச்சை நடக்க உள்ளதாகவும், இதையடுத்து மன்னரின் அனைத்து பொது நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டதாக அரண்மணை வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதே போன்று சார்லஸின் மருமகளும், இளவரசர் வில்லியம் மனைவியுமான கேட் மிடில்டனுக்கும் வயிற்றில் கட்டி அகற்றவதற்காக லண்டனில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.