பிரிட்டன் பணக்காரர் பட்டியல்: முதலிடத்தில் ஹிந்துஜா குழும தலைவர்
பிரிட்டன் பணக்காரர் பட்டியல்: முதலிடத்தில் ஹிந்துஜா குழும தலைவர்
UPDATED : மே 19, 2024 04:21 PM
ADDED : மே 19, 2024 03:17 PM

லண்டன்: பிரிட்டனின் வசிக்கும் முதல் ஆயிரம் பணக்காரர்கள் குறித்து வெளியிடப்பட்ட பட்டியலில் ஹிந்துஜா குழும தலைவர் கோபிசந்த் ஹிந்துஜா முதலிடத்தில் உள்ளார்.
இந்த ஆண்டு அவரின் சொத்து மதிப்பு 2.196 பில்லியன் யூரோ உயர்ந்தது. இதனால், அவரின் மொத்த சொத்து மதிப்பு 37,196 பில்லியன் யூரோ ஆக உள்ளது.
சண்டே டைம்ஸ் இதழின் பணக்காரர் பட்டியலில் கோபிசந்த் ஹிந்துஜா தொடர்ந்து 6வது ஆண்டாக முதலிடத்தில் உள்ளார். இதற்கு அடுத்த 2வது இடத்தில் பிரிட்டன் வாழ் அமெரிக்க தொழிலதிபர் லியோனார்ட் பிளாவட்னிக் 29.246 பில்லியன் யூரோ சொத்துகளுடன் உள்ளார்.
யார் இந்த கோபிசந்த் ஹிந்துஜா
1940ம் ஆண்டு பிறந்த கோபிசந்த் ஹிந்துஜாவுடன் உடன் பிறந்தவர்கள் 3 பேர். ஸ்ரீசந்த், பிரகாஷ் மற்றும் அசோக் ஆகியோர் இவரது சகோதரர்கள்.
இவர் 1959 ல் பாப்பே ஜெய்ஹிந்த் கல்லூரியில் பட்டம் முடித்தார். பிரிட்டனின் வெஸ்மின்ஸ்டர் பல்கலையில் சட்டப்படிப்பில் கவுரவ டாக்டர் பட்டமும், ரிச்மண்ட் கல்லூரியில் பொருளாதாரத்தில் கவுரவ டாக்டர் பட்டமும் பெற்றுள்ளார்.
ஹிந்துஜா குழுமத்தின் வர்த்தகத்தை பல மில்லியன் டாலர் அளவுக்கு உயர்த்தியதில் கோபிசந்த் ஹிந்துஜாவுக்கு முக்கிய இடம் உண்டு.
டிரக்குகள், வங்கி, கேபிள்டிவி மற்றும் எண்ணெய் வணிகத்தில் இவரது நிறுவனம் ஈடுபட்டு உள்ளது.
தற்போது 87 வயதாகும் இவர், 1959 ம் ஆண்டு குடும்ப தொழிலில் இணைந்தார். கடந்த மே மாதம் அவரது சகோதரர் காலமானதைத் தொடர்ந்து, ஹிந்துஜா குழுமத்தின் தலைவராக பதவியேற்றார்.

