தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/உலகம்/ பிரிட்டன் மன்னரின் சகோதரர் கைது

 பிரிட்டன் மன்னரின் சகோதரர் கைது

 பிரிட்டன் மன்னரின் சகோதரர் கைது


ADDED : பிப் 20, 2026 02:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 20, 2026 02:10 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

லண்டன்: பா லியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீனுடன் தொடர்பு உள்ளதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லசின் சகோதரர் ஆண்ட் ரூ, 66, நேற்று கைது செய்யப்பட்டார்.

அமெரிக்காவைச் சேர்ந்த தொழிலதிபர் ஜெப்ரி எப்ஸ்டீன் மீது பல பாலியல் குற்றச்சாட்டுகள் உள்ளன.

சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர் உயிரிழந்தார். இது தொடர்பான வழக்கு விசாரணையின்போது, ஜெப்ரி எப்ஸ்டீனுக்கு உலக நாடுகளின் பல தலைவர்களுடன் தொடர்பு இருப்பதாக தெரியவந்துள்ளது.

இந்தத் தலைவர்களுக்கு விருந்தளிப்பதற்காக, பல சிறுமியரைக் கடத்தியதாகவும் எப்ஸ்டீன் மீது குற்றச்சாட்டு உள்ளது.

இந்த விவகாரம் வெளியாகி, உலக நாடுகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பல நாடுகளின் அமைச்சர்கள் உள்ளிட்டோர் பதவியில் இருந்து விலகியுள்ளனர்.

இந்நிலை யில், ஐரோப்பிய நாடான பிரிட்டனின் அரசக் குடும்பத்தைச் சேர்ந்த ஆண்ட்ரூ மவுன்ட்பேட்டன் வின்ட்சர் பெயரும் இதில் இ டம்பெற்றுள்ளது.

மறைந்த பிரிட்டன் ராணி எலிசபெத்தின் மூன்றாவது மகன் ஆண்ட்ரூ. இவரது சகோதரர் சார்லஸ், தற்போது பிரிட்டன் மன்னராக உள்ளார். இந்த விவகாரம் தெரியவந்ததும், இளவரசர் பட்டத்தை ஆண்ட்ரூ துறந்தார்; மேலும், அரண்மனையில் இருந்து வெளியேறினார்.

இந்நிலையில், பிரிட்டன் போலீசாரால் ஆண்ட்ரூ நேற்று காலை கைது செய்யப்பட்டுள்ளார். அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக ஏற்பட்டுள்ள சந்தேகத்தின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பிரிட்டனின் முன்னாள் இளவரசர் ஒருவர் கைது செய்யப்படுவது இதுவே முதல் முறை. நேற்று, 66 வயதை நிறைவு செய்த நிலையில், ஆண்ட்ரூ கைது செய்யப்பட்டுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us