ADDED : மார் 06, 2026 03:00 AM

லண்டன்: மேற்காசியாவிற்கு கூடுதல் போர் விமானங்களை பிரிட்டன் அனுப்பியுள்ளது. மேலும், ஈரானுடன் பேச்சுவார்த்தை வாயிலாக தீர்வு காண வலியுறுத்தியுள்ளார் அந்நாட்டு பிரதமர் கீர் ஸ்டார்மர்.
மேற்காசியா நாடான கத்தாரில், ஐரோப்பிய நாடான பிரிட்டனின் விமானப் படை தளம் உள்ளது. தற்போது கூடுதலாக அதிநவீன, 'டைபூன்' ரக போர் விமானங்கள் அனுப்பப்பட்டுள்ளன.
இது குறித்து ஸ்டார்மர் கூறியுள்ளதாவது:
இந்த பிராந்தியத்தில் உள்ள எங்கள் நட்பு நாடுகளையும், பிரிட்டன் குடி மக்களையும் பாதுகாப்பதற்கான தற்காப்பு நடவடிக்கையாகவே இந்த விமானங்கள் அனுப்பப்பட்டுள்ளன. வான்பரப்பில் ஏற்படும் அச்சுறுத்தலை முறியடிக்க எங்கள் படைகள் தயார் நிலையில் உள்ளன.
ராணுவ ரீதியாக தயார் நிலையில் இருந்தாலும், இந்த போர் மேலும் விரிவடைவதை தடுக்க பேச்சு நடத்துவதே சரியான தீர்வாக இருக்கும்.
இவ்வாறு கூறினார்.
