பிரிட்டன் பிரதமரின் பொங்கல் கொண்டாட்டம்: தமிழர்களுக்கு பாராட்டு
பிரிட்டன் பிரதமரின் பொங்கல் கொண்டாட்டம்: தமிழர்களுக்கு பாராட்டு
ADDED : ஜன 21, 2025 09:50 PM

லண்டன்: பிரிட்டன் பிரதமர் கேர் ஸ்டார்மர், பொங்கல் பண்டிகை கொண்டாடினார். அப்போது, நாட்டின் வளர்ச்சிக்கு அங்கு வசிக்கும் தமிழர்கள் முக்கிய பங்காற்றி உள்ளதாக பாராட்டு தெரிவித்து உள்ளார்.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகை கடந்த வாரம் வெகு சிறப்பாக மாநிலம் முழுவதும் கொண்டாடப்பட்டது. உலகின் பல நாடுகளில் வசித்து வரும் தமிழர்களும் பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர்.
இந்நிலையில், நேற்று பிரிட்டன் பிரதமர் கேர் ஸ்டார்மர், பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் பொங்கல் பண்டிகையை கொண்டாடினார். இவ்விழாவில், இலங்கையைச் சேர்ந்த தமிழ் எம்.பி., உமா குமாரன் மற்றும் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் கியர் ஸ்டார்மர் பேசியதாவது; பிரிட்டனுக்கு தமிழ் சமுதாயத்தை சேர்ந்தோர் முக்கிய பங்களிப்பை அளித்து உள்ளனர். தமிழ் சமூகத்தின் வளமையும், தாராள மனப்பான்மையும் நிரம்பி வழிவதுடன், நாட்டிற்கு சிறந்த எதிர்காலத்தையும், நம்பிக்கையையும் அளிக்கிறது. உங்கள் வரலாறு, பாரம்பரியம், சமூகம் மற்றும் ஒற்றுமைக்கான தேவையை அனைவருக்கும் நினைவூட்டுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.