UPDATED : பிப் 19, 2026 04:23 PM
ADDED : பிப் 19, 2026 04:19 PM

லண்டன்: பிரிட்டன் மன்னர் சார்லசின் சகோதரர் ஆண்ட்ரு மவுன்ட் பேட்டன் விண்ட்ஸ்டர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
விண்ட்சரில் உள்ள அவரது வீட்டில் வைத்து அவர் கைது செய்யப்பட்டார். அமெரிக்காவில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள ஜெப்ரி எப்ஸ்டீன் விவகாரத்திலும் இவரது பெயர் அடிபட்டது. ஆனால், அதில் தனக்கு எந்தவித தொடரபும் இல்லை என அவர் மறுத்து இருந்தார்.
மறைந்த பிரிட்டன் அரசு எலிசபெத்தின் மூன்றாவது மகன் இவர் ஆவார். எப்ஸ்டீன் விவகாரத்தில் அவரது பெயர் அடிபட்டதும், ஆண்ட்ரு அரண்மனையை விட்டு வெளியேறிவிட்டார் .
இந்நிலையில், பதவியை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது இளவரசர் பட்டத்தை அவர் துறந்துள்ளார். முன்னாள் இளவரசர் ஒருவர் கைது செய்யப்படுவது பிரிட்டன் வரலாற்றில் இதுவே முதல் முறையாகும். இன்று அவர் 66 வது பிறந்த நாள் கொண்டாடும் நிலையில் அவரை போலீசார் கைது செய்யப்பட்டு உள்ளார்.இது தொடர்பாக தேம்ஸ் வேலி போலீசார் அறிக்கை வெளியிட்டு உள்ளனர். அதில், சட்ட விதிமுறைகளின்படி இளவரசரின் பெயரை அவர்கள் வெளியிடவில்லை.

