புற்றுநோய்க்கு தடுப்பூசி: இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டோம்: ரஷ்ய அதிபர் புடின் தகவல்
புற்றுநோய்க்கு தடுப்பூசி: இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டோம்: ரஷ்ய அதிபர் புடின் தகவல்
ADDED : பிப் 15, 2024 10:39 AM

மாஸ்கோ: 'புற்றுநோய்க்கான தடுப்பூசியை கண்டறிவதில் ரஷ்ய விஞ்ஞானிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளனர்' என அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, மாஸ்கோவில் நடந்த வருங்காலத்திற்கான தொழில்நுட்பம் குறித்த மாநாட்டில் புடின் பேசியதாவது: ரஷ்ய விஞ்ஞானிகள் புதிய வரலாறு படைக்க உள்ளனர். நோய் எதிர்ப்பு சக்தி மருந்து மற்றும் புற்றுநோய் பாதிக்கப்பட்டோருக்கான தடுப்பூசியை கண்டறியும் பணி நிறைவடையும் நிலையில் உள்ளது. ரஷ்ய விஞ்ஞானிகள் உருவாக்கி வரும் தடுப்பூசிகள் விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வரும். இவ்வாறு அவர் பேசினார்.
ரஷ்ய விஞ்ஞானிகள் உருவாக்கி வரும் இந்த தடுப்பூசிகள், எந்த வகையான புற்றுநோயை குணப்படுத்த உதவும் என்பது பற்றி புடின் எந்த தகவலையும் குறிப்பிடவில்லை. இங்கிலாந்து - ஜெர்மனி நாடுகளும் இணைந்து புற்றுநோய்க்கான நிரந்தர தீர்வு தரும் மருந்தை கண்டறியும் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது எனக் கூறப்படுகிறது.

