போர் நிறுத்த ஒப்பந்தம் இறுதிக்கட்டம்; பாலஸ்தீனியர்கள் 100 பேர், பிணைக்கைதிகள் 3 பேர் விடுவிப்பு
போர் நிறுத்த ஒப்பந்தம் இறுதிக்கட்டம்; பாலஸ்தீனியர்கள் 100 பேர், பிணைக்கைதிகள் 3 பேர் விடுவிப்பு
ADDED : பிப் 09, 2025 06:57 AM

ஜெருசலேம்: பிணைக்கைதிகள் 3 பேரை ஹமாஸ் விடுவித்தது. இதற்கு, பதிலாக 100க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்களை இஸ்ரேல் விடுவித்தது.
மேற்காசிய நாடான இஸ்ரேல் மற்றும் காசா உள்ளிட்ட பாலஸ்தீன பகுதிகளை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாதிகள் இடையே, 2023, அக்., 7ல் போர் துவங்கியது. அமெரிக்கா, கத்தார், எகிப்து ஆகியவற்றின் மத்தியஸ்த முயற்சியால், போரை நிறுத்துவதற்கான ஒப்பந்தம் சமீபத்தில் கையெழுத்தானது.
ஹமாஸ் பயங்கரவாதிகள் பிடித்துச்சென்ற பிணைக் கைதிகளை விடுவிக்கவும், அதற்காக இஸ்ரேல் சிறையில் உள்ள பாலஸ்தீனர்களை விடுவிக்கவும் முடிவு செய்யப்பட்டது. போர் நிறுத்தம் ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.இதுவரை 7க்கும் மேற்பட்ட பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில், மேலும் மூன்று பிணைக்கைதிகளை, காசாவில் உள்ள செஞ்சிலுவை சங்கத்தினரிடம் ஹமாஸ் படையினர் ஒப்படைத்தனர். இதற்கு, பதிலாக 100க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்களை இஸ்ரேல் விடுவித்தது.
அவர்களின் கொடூரமான தோற்றம் இஸ்ரேலியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மேலும் இஸ்ரேல் காசாவில் போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் போர் நிறுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் ஏராளமான பாலஸ்தீனியர்களை விடுவிக்கத் தொடங்கியது.
இஸ்ரேலுக்கு வந்த பிணைக்கைதிகளை குடும்பத்தினர் கண்ணீர் மல்க ஆரத்தழுவி வரவேற்றனர்.
பிரதமர் எச்சரிக்கை
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியதாவது:'பலவீனமான பிணைக்கைதிகளை பார்க்கும் போது அதிர்ச்சி அளிக்கிறது.ஹமாஸ் படையினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என எச்சரிக்கை விடுத்தார்.

