பிப்.,23ல் இந்தியா - பாக்., மோதல்: சாம்பியன்ஸ் டிராபியில்...
பிப்.,23ல் இந்தியா - பாக்., மோதல்: சாம்பியன்ஸ் டிராபியில்...
UPDATED : டிச 24, 2024 06:31 PM
ADDED : டிச 24, 2024 06:12 PM

துபாய்: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்க்கும் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி பிப்., 23 அன்று துபாயில் நடைபெற உள்ளது.
பாகிஸ்தானில், ஐ.சி.சி., சாம்பியன்ஸ் டிராபி 9வது சீசன் வரும் பிப். 19 முதல் மார்ச் 9 வரை நடக்கவுள்ளது. இதில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தான், இந்தியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கின்றன. இதற்கான போட்டிகள் கராச்சி, லாகூர், ராவல்பிண்டியில் நடக்கவுள்ளன.
அரசியல் காரணங்களுக்காக இந்திய அணி, பாகிஸ்தான் சென்று போட்டியில் பங்கேற்க மறுத்தது. இதனையடுத்து இந்திய அணி விளையாடும் போட்டிகளை மட்டும் துபாயில் நடத்திட முடிவானது.
இந்திய அணி 'ஏ' பிரிவில் பாகிஸ்தான், வங்கதேசம், நியூசிலாந்து அணிகளுடன் இடம் பிடித்துள்ளது.
'பி' பிரிவில் ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா அணிகள் இடம் பெற்றுள்ளன.
இந்நிலையில், இப்போட்டிக்கான அட்டவணையை ஐ.சி.சி., அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.
இதில் இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் விவரம்
பிப்., 20- இந்திய - வங்கதேசம்
பிப்., 23- இந்தியா - பாகிஸ்தான்
மார்ச் 2- இந்தியா - நியூசிலாந்து
பிப்., 19- பாக்., - நியூசிலாந்து
பிப்.,21- ஆப்கன்- தென் ஆப்ரிக்கா
பிப்.22- ஆஸி., - இங்கிலாந்து
பிப்., 24- வங்கதேசம் - நியூசி.,
பிப்., 25- ஆஸி.,- தென் ஆப்ரிக்கா
பிப்., 25- ஆப்கன் - இங்கிலாந்து
பிப்.,27- பாக்.,- வங்கதேசம்
பிப்.,28- ஆப்கன்- ஆஸி.,
மார்ச் 01- தென் ஆப்ரிக்கா - இங்கிலாந்து
லீக் சுற்றில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிரண்டு இடம் பிடிக்கும் அணிகள், வரும் மார்ச் 4, 5ல் நடக்கும் அரையிறுதியில் விளையாடும். பைனல் மார்ச் 9ல் நடக்கும். இந்திய அணி அரையிறுதி, பைனலுக்கு முன்னேறினால், போட்டிகள் துபாயில் நடத்தப்படும்.