ADDED : செப் 15, 2026 06:13 PM
சாண்டியாகோ: விலங்குகள் மூலம் மனிதர்களுக்கு பரவும் ரேபிஸ் நோயை முற்றிலும் ஒழித்த, முதல் தென் அமெரிக்க நாடாக சிலி சாதனை படைத்துள்ளது.
ரேபிஸ் நோய் பொதுவாக வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட விலங்குகள் கடிப்பதால் அதன் உமிழ்நீர் மூலம் மனிதர்களுக்கு பரவுகிறது. இந்த நோய் பெரும்பாலும் உயிருக்கே ஆபத்தானது. ஆனால் தடுப்பூசி, கண்காணிப்பு மற்றும் உடனடி சிகிச்சை மூலம் அதை தடுக்க முடியும்.
உலகளவில் ரேபிஸ் நோய் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், சிலி அதனை முற்றிலுமாக ஒழித்திருப்பதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக சிலி அரசு செல்லப்பிராணிகளுக்கு பரவலான தடுப்பூசி முகாம்கள், நாய் எண்ணிக்கை கட்டுப்பாடு, மக்களிடம் விழிப்புணர்வு போன்ற நடவடிக்கைகளை செயல்படுத்தி வந்தது.
இதன் பயனாக 1972ம் ஆண்டுக்குப் பின், சிலியில் நாயிடமிருந்து மனிதருக்கு ரேபிஸ் பரவவில்லை என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
