ADDED : ஆக 01, 2025 03:35 PM
இஸ்லாமாபாத்: பருவநிலை மாற்ற அச்சுறுத்தல்களை கண்காணிப்பதற்காக பாகிஸ்தானின் செயற்கைக்கோளை, சீனா நேற்று விண்வெளிக்கு அனுப்பியது.
விண்வெளி ஆராய்ச்சியில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள, நம் அண்டை நாடான பாகிஸ்தான், அதன் மிக நெருங்கிய நட்பு நாடான சீனாவின் உதவியுடன் செயற்கைக்கோள்களை ஏவி வருகிறது. அதன்படி, பாகிஸ்தான் இயற்கை வளங்களை கண்காணித்து நிர்வகிக்கும் திறனை அதிகரிக்கவும், பேரிடர்கள் குறித்து முன்னதாகவே அறிந்து கொள்வதற்கும், கடந்த ஜனவரியில், செயற்கைக்கோளை ஏவியது.
இதைத் தொடர்ந்து வெள்ளம், நிலச்சரிவுகள், பனிப்பாறை உருகுதல் மற்றும் வனப்பகுதிகள் அழிப்பு உள்ளிட்ட சவால்களை எதிர்கொள்வதற்காக மற்றொரு செயற்கைகோளை பாகிஸ்தான் அனுப்பியுள்ளது. இதை சீனாவின் குய்சோ ஏ - 1 ராக்கெட் மூலம் அனுப்பப்பட்டது.
சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள ஜிச்சாங் செயற்கைக்கோள் ஏவுதள மையத்திலிருந்து, 'குய்சோ- - 1ஏ' ராக்கெட் மூலம் ஏவப்பட்டது.

