பேச்சுவார்த்தைக்கு வாங்க; வர்த்தகத்தில் அச்சுறுத்தல் கூடாது; அமெரிக்காவுக்கு சீனா வலியுறுத்தல்
பேச்சுவார்த்தைக்கு வாங்க; வர்த்தகத்தில் அச்சுறுத்தல் கூடாது; அமெரிக்காவுக்கு சீனா வலியுறுத்தல்
ADDED : ஏப் 17, 2025 07:23 AM

பீஜிங்: சீனா, அமெரிக்கா ஆகிய இருநாடுகளுக்கு இடையே வர்த்தகப் போர் தீவிரம் அடைந்துள்ளது. ''பிளாக் மெயில், அச்சுறுத்தல் விடுக்க கூடாது'' என சீனாவுக்கு அமெரிக்கா வலியுறுத்தி உள்ளது.
சீன பொருட்களுக்கு இதுவரை 145 சதவீதமாக இருந்த இறக்குமதி வரியை 245 சதவீதமாக உயர்த்துவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. சீனாவின் பழிவாங்கும் நடவடிக்கைக்கு பதிலடி கொடுப்பதற்காக, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என வெள்ளை மாளிகை விளக்கம் அளித்துள்ளது. அமெரிக்கா- சீனா ஆகிய இருநாடுகளுக்கு இடையே வர்த்தகப் போர் தீவிரம் அடைந்துள்ளது.
இந்நிலையில், ''பிளாக்மெயில், அச்சுறுத்தல் விடுக்க கூடாது'' என சீனாவுக்கு அமெரிக்கா வலியுறுத்தி உள்ளது. இது குறித்து சீனா வெளியுறவுத்துறை கூறியதாவது: அமெரிக்கா வர்த்தகப் போரை தொடங்கியது. நமது நியாயமான நலன்களையும், சர்வதேச நியாயத்தையும், நீதியையும் பாதுகாக்க சீனா தேவையான எதிர் நடவடிக்கைகளை எடுத்தது.
அமெரிக்கா உண்மையிலேயே பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண விரும்பினால், அதிகபட்ச அழுத்தத்தைப் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு, சீனாவை பிளாக்மெயில் செய்வதையும், மிரட்டுவதையும் நிறுத்த வேண்டும். சமத்துவம், மரியாதை மற்றும் பரஸ்பர நன்மை ஆகியவற்றின் அடிப்படையில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இவ்வாறு சீனா வெளியுறவுத்துறை கூறியுள்ளது.