ADDED : மே 08, 2025 02:58 AM

நம் அண்டை நாடான சீனா, பாகிஸ்தானுக்கு வான் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், ஏவுகணை எதிர்ப்பு அமைப்பை வழங்கி உள்ளது. அதாவது, பாக்., வான்வெளிக்குள் ஏவுகணைகள், ட்ரோன்கள் அத்துமீறி நுழைந்தால், அவற்றை கண்டுபிடித்து, இந்த அமைப்பு அழிக்கும்; மேலும் எச்சரிக்கை செய்யும்.
எனினும், நேற்று அதிகாலை நம் ராணுவத்தின், 'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கையின் போது, இந்த ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு வேலை செய்யவில்லை; நம் ராணுவத்தின் ட்ரோன்களை இடைமறித்து தாக்கவில்லை.
இந்த அமைப்பை தாண்டி சென்று, பாகிஸ்தானுக்குள் நுழைந்து நம் ஏவுகணைகள் தாக்குதல் நடத்தி உள்ளன. இந்த தாக்குதலுக்கு, ஐரோப்பிய நாடான பிரான்சின், 'ஸ்கால்ப் குரூஸ்' ஏவுகணைகளை நம் ராணுவத்தினர் பயன்படுத்தி உள்ளனர்.
குறைந்த உயரத்தில் பறக்கும் திறனுடைய இந்த ஏவுகணைகள், பாகிஸ்தானின் ஏவுகணை எதிர்ப்பு அமைப்பின் ரேடாரில் தென்படாமல் தாக்குதலில் ஈடுபடுத்தப்பட்டன.