தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/உலகம்/ சீனாவில் மக்கள் தொகை வரலாறு காணாத வீழ்ச்சி

 சீனாவில் மக்கள் தொகை வரலாறு காணாத வீழ்ச்சி

 சீனாவில் மக்கள் தொகை வரலாறு காணாத வீழ்ச்சி


ADDED : ஜன 20, 2026 05:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 20, 2026 05:09 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பீஜிங்: சீனாவின் மக்கள் தொகை, தொடர்ச்சியாக நான்காவது ஆண்டாக வரலாறு காணாத அளவில் வீழ்ச்சி அடைந்துள்ளது.

அதிக மக்கள் தொகை கொண்ட நாடு என்ற பெருமையை, நம் அண்டை நாடான சீனா நீண்ட காலமாக தக்க வைத்திருந்தது. ஆனால், தற்போது அந்த நிலை மாறி, அந்நாட்டின் மக்கள் தொகை தொடர்ந்து சரிந்து வருகிறது.

பொருளாதார அழுத்தம், வேலை பளு, விலைவாசி உயர்வு போன்ற காரணங்களால் திருமணம், குழந்தை பெறுதலில் இளைஞர்கள் ஆர்வம் காட்டாததே இதற்கு முக்கிய காரணங்களாக கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு இறுதியில், சீனாவின் மொத்த மக்கள் தொகை 140.5 கோடி என்று கணக்கிடப்பட்டுள்ளது. இது, முந்தைய ஆண்டை விட 33.9 லட்சம் குறைவு. இந்த வீழ்ச்சி 2024ம் ஆண்டை விட வேகமானது என்று, சீனாவின் தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

சீனாவில், 2025ல் பதிவான புதிய பிறப்புகள் வெறும் 79.2 லட்சம் மட்டுமே. அங்கு, ஆயிரம் பேருக்கு 5.6 சதவீதம் என்ற பிறப்பு விகிதமே உள்ளது. இது, 1949ம் ஆண்டு சீன குடியரசு துவங்கியதில் இருந்து இல்லாத மிகக்குறைந்த அளவு.

அதே சமயம், சீனாவில் 60 வயதுக்கு மேற்பட்டோர் எண்ணிக்கை 32.3 கோடியாக உள்ளது. இது மொத்த மக்கள் தொகையில் 23 சதவீதத்தை எட்டியுள்ளது. இதனால் எதிர்காலத்தில் பணியாளர்கள் குறைவு, ஓய்வூதிய செலவு அதிகரிப்பு, உற்பத்தி குறைவு போன்றவை ஏற்படும்.

எனவே சீன அரசு ஒரு குழந்தை கொள்கையை நீக்கி, மூன்று குழந்தைகள் வரை அனுமதித்து, திருமணம், குழந்தைப் பேறுக்கு பல ஊக்கத் திட்டங்கள், பண உதவி, வரி சலுகைகள், ஆணுறைக்கு வரி உயர்வு போன்ற பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனாலும் பிறப்பு விகிதம் தொடர்ந்து குறைந்து வருவது அரசுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us