தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/உலகம்/ உசைன் போல்ட் சாதனையை முறியடித்த சீனா ‘ரோபோ’

உசைன் போல்ட் சாதனையை முறியடித்த சீனா ‘ரோபோ’

உசைன் போல்ட் சாதனையை முறியடித்த சீனா ‘ரோபோ’


ADDED : ஆக 23, 2026 06:12 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 23, 2026 06:12 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பீஜிங்: சீனாவில் இரண்டாவது ஆண்டாக நடக்கும் உலக மனித உருவ ரோபோ விளையாட்டுப் போட்டியின் முதல் நாளில், மனிதர்களின் உலக சாதனைகளை ரோபோக்கள் முறியடித்தன. 100 மீ., ஓட்டய பந்தயத்தில் ஜமைக்கா நாட்டு வீரர் உசைன் போல்ட்டின் உலக சாதனையை ரோபோ ஒன்று முறியடித்தது.

நம் அண்டை நாடான சீன தலைநகர் பீஜிங்கில், மனித உருவ ரோபோக்களுக்கான சர்வதேச விளையாட்டு போட்டி நேற்று முன்தினம் தொடங்கியது. ஐந்து நாட்கள் நடக்கும் இந்த போட்டியில், இந்த அளவு மிக அதிகமாக, 2,056 மனித உருவ ரோபோக்கள், 666 அணிகள் பங்கேற்றுள்ளன. ஓட்டம், டேபிள் டென்னிஸ், கால்பந்து உள்ளிட்ட போட்டிகள் நடக்கின்றன.  இதன் மூலம், எதிர் காலத்தில் ரோபோக்கள் எந்தெந்த துறைகளில் அதிகளவில் பயன்படுத்தப்படலாம் என்பதற்கான ஒரு முன்னோட்டம் கிடைக்கிறது.

போட்டியின் தொடக்க விழாவில், 100க்கும் மேற்பட்ட மனித உருவ ரோபோக்கள் மைதானத்தில் அணிவகுத்தன. ஒரே நேரத்தில் ஒருங்கிணைந்து செயல்பட்ட அவற்றின் செயல்பாடு பார்வையாளர்களை கவர்ந்தது.

அதை தொடர்ந்து நடந்த, 100 மீ., ஓட்டப் பந்தயதில், பீஜிங்கைச் சேர்ந்த, ‘எக்ஸ் -ஹியூமனாய்டு’ என்ற நிறுவனம் தயாரித்த ரோபோ, பந்தய துாரத்தை, 9.39 வினாடிகளில் கடந்தது. இது, கரீபிய தீவு நாடான ஜமைக்காவைச் சேர்ந்த வீரர் உசைன் போல்ட், 2009ல் படைத்த, 9.58 வினாடிகள் என்ற உலக சாதனையை விட குறைவு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us