தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/உலகம்/ சீனாவின் பல்கலை சுரண்டலை பொறுத்துக் கொள்ள முடியாது; அமெரிக்கா

சீனாவின் பல்கலை சுரண்டலை பொறுத்துக் கொள்ள முடியாது; அமெரிக்கா

சீனாவின் பல்கலை சுரண்டலை பொறுத்துக் கொள்ள முடியாது; அமெரிக்கா


UPDATED : மே 30, 2025 11:52 AM

ADDED : மே 30, 2025 11:28 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 30, 2025 11:52 AM ADDED : மே 30, 2025 11:28 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வாஷிங்டன்: சீனாவின் பல்கலை சுரண்டலையும், ஆய்வுகள் திருடுவதையும் பொறுத்துக் கொள்ள முடியாது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ஹார்வர்டு பல்கலை நிர்வாகத்துடன் அதிபர் டிரம்ப்புக்கு மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், பல்கலைக்கு வழங்கப்படும் நிதியை குறைத்த அவர், அங்கு பயிலும் வெளிநாட்டு மாணவர்கள் சேர்க்கையை நிறுத்தி வைக்க உத்தரவிட்டார். மேலும், வெளிநாட்டு மாணவர்கள் சேர்க்கைக்கான இட ஒதுக்கீட்டையும் 25 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக குறைத்தார்.

இதனிடையே, சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொடர்பு கொண்டவர்கள் சீன மாணவர்களுக்கான விசாக்களை ரத்து செய்ய முடிவு செய்துள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார். மேலும், வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா நடைமுறைகளை இன்னும் கடினமாக்க பரிசீலனை செய்யுமாறும் அறிவுறுத்தியுள்ளார்.

அமெரிக்காவில் இந்தியாவுக்கு அடுத்தபடியாக சீன மாணவர்கள் தான் அதிகம் பயின்று வருகின்றனர்.

இந்த நிலையில், அமெரிக்க பல்கலைக்கழகங்களை சீனா சுரண்டுவதையும், ஆராய்ச்சி விபரங்கள் மற்றும் அறிவுசார் சொத்துக்கள் திருடப்படுவதை ஒரு போதும் பொறுத்துக் கொள்ள முடியாது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் டாமி ப்ரூஷ் தெரிவித்துள்ளார். மேலும், நாட்டுக்கு அச்சுறுத்தல் கொடுப்பவர்கள் அல்லது பிரச்னையை உண்டாக்குபவர்களை கண்டறிந்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

அதேவேளையில், அமெரிக்காவின் இந்த விசா ரத்து முடிவால் எத்தனை சீன மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்ற விபரத்தை அளிக்க டாமி ப்ரூஷ் மறுத்து விட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us