18 மாதங்களுக்கு பின் இந்தியாவுக்கு புது தூதரை நியமித்தார் சீன அதிபர்
18 மாதங்களுக்கு பின் இந்தியாவுக்கு புது தூதரை நியமித்தார் சீன அதிபர்
UPDATED : மே 07, 2024 05:59 PM
ADDED : மே 07, 2024 05:45 PM

பீஜிங்: 18 மாதங்களுக்கு பிறகு இந்தியாவுக்கான தூதராக ஷியு பெயிகோங் என்பவரை சீன அதிபர் ஷி ஜின்பிங் நியமித்துள்ளார்.
இந்தியாவிற்கான சீன தூதராக சன் வெயிடோங் பதவி வகித்து வந்தார். அவரது பதவிக்காலம் கடந்த 2022 அக்., மாதத்துடன் நிறைவு பெற்றது. தற்போது இவர் அந்நாட்டின் வெளியுறவு இணை அமைச்சராக உள்ளார். இவர் பதவிக்காலம் முடிந்த பிறகு இந்தியாவிற்கான புது தூதர் யாரையும் அந்நாட்டு அரசு நியமிக்கவில்லை.
இந்நிலையில், இந்தியாவிற்கான புதிய தூதராக ஷியு பெயிகோங் நியமிக்கப்பட்டு உள்ளார். இது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இருப்பினும், இந்த நியமனத்தை சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் உறுதி செய்துள்ளது. ஷியு பெயிகோங் விரைவில் டில்லி வந்து துாதராக பதவியேற்பார் என தகவல் வெளியாகி உள்ளது.