தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/உலகம்/வர்த்தக கப்பல்கள் அமெரிக்க உத்தரவுக்கு கட்டுப்பட வேண்டும்: ரூபியோ திமிர்ப்பேச்சு

வர்த்தக கப்பல்கள் அமெரிக்க உத்தரவுக்கு கட்டுப்பட வேண்டும்: ரூபியோ திமிர்ப்பேச்சு

வர்த்தக கப்பல்கள் அமெரிக்க உத்தரவுக்கு கட்டுப்பட வேண்டும்: ரூபியோ திமிர்ப்பேச்சு

1


ADDED : ஜூன் 13, 2026 08:40 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 13, 2026 08:40 PM

1


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வாஷிங்டன்: ஹார்முஸ் ஜலசந்தியில் அமைதியை நிலைநாட்டுவதற்கு அனைத்து வர்த்தக கப்பல்களும் அமெரிக்கப் படைகளின் உத்தரவுக்கு அடிபணிய வேண்டும் என அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ரூபியோ கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் முதன்மை துணை செய்தித்தொடர்பாளர் கூறியதாவது: இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருடன், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்க் ரூபியோ பேசினார். ஹார்முஸ் ஜலசந்தியில் சமீபத்தில் நடந்த விஷயங்கள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினார்.ஜலசந்தியில் அமைதியையும், பாதுகாப்பையும் நிலைநாட்டும் நோக்கில் அனைத்து வர்த்தக கப்பல்களும் அமெரிக்கப் படைகளின் உத்தரவுகளுக்கு அடிபணிய வேண்டும் என ரூபியோ வலியுறுத்தினார். அமெரிக்கா முற்றுகையை மீறுவதும், ஈரானிய எண்ணெயை சட்டவிரோதமாக கடத்துவதும் பொறுத்துக் கொள்ள முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

தாக்குதல்

ஹார்முஸ் ஜலசந்தி மற்றும் ஓமன் கடற்பகுதியில் இந்திய மாலுமிகள் பயணித்த மூன்று கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், மூன்று இந்திய மாலுமிகள் உயிரிழந்தனர்.அமெரிக்க கடற்படையின் இந்த நடவடிக்கைக்கு, மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்தது. நம் நாட்டிற்கான அமெரிக்க அரசின் தற்காலிக துாதர் ஜேசன் மீக்சிற்கு, கடந்த 10ம் தேதி, 'சம்மன்' அனுப்பி கண்டனம் தெரிவித்தது.

இந்த சம்பவம் நடந்த இரு தினங்களுக்கு பின், நேற்று மீண்டும் இரண்டாவது முறையாக நம் வெளியுறவுத்துறை அமைச்சகம் அவருக்கு சம்மன் அனுப்பியது.அவரிடம், 'சர்வதேச நீர் வழித்தடங்களில் வணிகக் கப்பல்கள் மற்றும் மனித உயிர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் இலக்கு வைப்பது உடனே நிறுத்தப்பட வேண்டும்; சர்வதேச சட்டங்களின்படி தடையற்ற கடல் வர்த்தகம் மீட்டெடுக்கப்பட வேண்டும்' என, மத்திய அரசு எடுத்துரைத்தது குறிப்பிடத்தக்கது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us