தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/உலகம்/காங்கோ: ‘எபோலா’ தொற்று 11 ஆயிரத்தை கடந்தது

காங்கோ: ‘எபோலா’ தொற்று 11 ஆயிரத்தை கடந்தது

காங்கோ: ‘எபோலா’ தொற்று 11 ஆயிரத்தை கடந்தது


ADDED : நவ 11, 2026 08:48 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 11, 2026 08:48 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கின்ஷாசா: மத்திய ஆப்ரிக்க நாடான காங்கோவில், ‘எபோலா’ தொற்று கடந்த மே மாதம் பரவத் தொடங்கியது. விலங்குகளிடம் இருந்து பரவும் இந்த வைரஸ், மனிதர்களை எளிதில் தாக்கக்கூடியது. இது உகாண்டா, சூடான் உள்ளிட்ட நாடுகளிலும் வேகமாக பரவி வருகிறது.

தற்போது பரவி வருவது எபோலா வைரஸின், ‘புண்டிபுக்யோ’ வகை என கூறப்படுகிறது. இதற்கு இதுவரை தடுப்பூசியோ அல்லது குறிப்பிட்ட சிகிச்சையோ இல்லை. நாட்டின் 26 மாகாணங்களில் எட்டு மாகாணங்களுக்கு இந்த நோய் பரவியுள்ளது.

காங்கோவில் மட்டும் இதுவரை 11,042 பேர் இந்த நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 5,387 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அந்நாட்டு சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இடுரி மற்றும் வடக்கு கிவூ ஆகிய இரண்டு முக்கிய மாகாணங்களில் தீவிரமடைந்துள்ள வன்முறை மற்றும் ஆயுத மோதல்கள் காரணமாக நோய் தடுப்பு பணிகள் முடங்கியுள்ளன.

மேலும் நாட்டின் பலவீனமான சுகாதாரக் கட்டமைப்பு மற்றும் பழுதடைந்த சாலைகள் கிராமப்புறங்களுக்குச் செல்லும் மருத்துவ உதவிகளைத் தடுத்துள்ளது. இதுவே உயிரிழப்பு காரணம் என மனித உரிமை ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us