காங்கோவை உலுக்கும் எபோலா தொற்று: பலி எண்ணிக்கை 2000ஐ கடந்ததால் மக்கள் அதிர்ச்சி
காங்கோவை உலுக்கும் எபோலா தொற்று: பலி எண்ணிக்கை 2000ஐ கடந்ததால் மக்கள் அதிர்ச்சி
ADDED : ஆக 11, 2026 07:09 PM

கின்ஷாசா:காங்கோவில் எபோலா வைரஸ் தொற்றுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 2011 ஆக உயர்ந்துள்ளது.
மத்திய கிழக்கு ஆப்ரிக்க நாடான காங்கோவில் எபோலா என்ற கொடிய வைரஸ் நோய் பரவி வருகிறது. அந்நாட்டில் மே மாதம் பரவத் தொடங்கிய இந்த தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
எபோலா தொற்றை கட்டுப்படுத்த முடியாமல் காங்கோ நாட்டின் சுகாதாரத்துறை திணறி வருகிறது. இந் நிலையில் எபோலாவுக்கு இம்முறை 2011 பேர் பலியாகி உள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதி வேகமாக பரவி வரும் தொற்றாக இந்த முறை இருக்கிறது என்கின்றனர் சுகாதாரத்துறையினர்.
தற்போது வெளியிடப்பட்டு உள்ள அதிகாரப்பூர்வ புள்ளி விவரங்களின் படி, 4381 பேருக்கு எபோலா தொற்று உள்ளது. 2011 பேர் பலியாகிவிட, 704 பேர் இன்னமும் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.
தொடக்கத்தில் எபோலா பலி எண்ணிக்கை ஆயிரத்தை தொட, 9 வாரங்களே ஆனது. ஆனால் இப்போது 3 வாரங்களிலேயே பலியானவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்து இருக்கிறது. அரிதான வைரஸ் என்பதால் ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் தடுப்பூசிகளோ, மருந்துகளோ பயன்படுத்தும் போது பலன் கிடைக்கவில்லை.
