250 சதவீதம் வரி விதிக்கும் கனடா: பதிலுக்கு பதில் வரி விதிப்போம் என டிரம்ப் காட்டம்
250 சதவீதம் வரி விதிக்கும் கனடா: பதிலுக்கு பதில் வரி விதிப்போம் என டிரம்ப் காட்டம்
UPDATED : மார் 08, 2025 07:49 AM
ADDED : மார் 08, 2025 07:05 AM

வாஷிங்டன்: அமெரிக்காவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பால் பொருட்கள் மீது கனடாவில் 250 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. பதிலுக்கு அமெரிக்காவும் அதே அளவு வரி விதிக்கும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்க காங்கிரஸின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றிய டிரம்ப், இந்தியா எங்களிடம் 100 சதவீதத்திற்கும் அதிகமான வரிகளை வசூலிக்கிறது. ஏப்ரல் 2ம் தேதி, பரஸ்பர வரிகள் அமலுக்கு வருகின்றன. அவர்கள் எங்களுக்கு என்ன வரி விதித்தாலும், நாங்கள் அவர்களுக்கு வரி விதிப்போம், என்று கூறினார்.
இந்நிலையில், இந்தியா வரிகளைக் குறைக்க ஒப்புக்கொண்டதாக, பரஸ்பர வரிகளை அறிவித்த சில நாட்களுக்குப் பிறகு, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
மேலும், அவர் கூறியதாவது: அமெரிக்காவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பால் பொருட்கள் மீது கனடாவில் 250 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. பதிலுக்கு அமெரிக்காவும் அதே அளவு வரி விதிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.