சிறந்த வரலாற்று ஆய்வுக்கான பிரிட்டன் பரிசு: இந்திய பேராசிரியர்கள் 2 பேருக்கு கவுரவம்
சிறந்த வரலாற்று ஆய்வுக்கான பிரிட்டன் பரிசு: இந்திய பேராசிரியர்கள் 2 பேருக்கு கவுரவம்
ADDED : செப் 24, 2024 11:40 AM

லண்டன்: சிறந்த வரலாற்று ஆய்வு புத்தகம் எழுதிய இந்திய வம்சாவளியை சேர்ந்த 2 பேராசிரியர்களுக்கு பிரிட்டன் நாட்டு உயரிய கவுரவம் வழங்கப்பட்டுள்ளது.
பிரிட்டனில் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக வொல்ப்சன் அறக்கட்டளையால் வொல்ப்சன் வரலாற்றுப் பரிசு ஆண்டுதோறும் வழங்கப்படும், இந்த கவுரவ பரிசு இங்கிலாந்தின் மிகவும் மதிப்புமிக்க வரலாற்றுப் சிறப்பு மிக்கதாகும். இது சிறந்த ஆராய்ச்சி மற்றும் கவர்ந்திழுக்கும் வாசிப்புத்திறனையும் கொண்ட புத்தகங்களை இந்த விருது அங்கீகரிக்கிறது.
இதன்படி இந்திய வம்சாவளியை சேர்ந்தவரும் டில்லியில் பிறந்தவருமான பேராசிரியர் ஜோயா சட்டர்ஜி எழுதிய புத்தகமான 'Shadows at Noon: The South Asian Twentieth Century'. என்ற நூலுக்கு கிடைத்துள்ளது. இந்த நூலில் தெற்காசிய 20 ம் நூற்றாண்டு கால நிகழ்வு மற்றும் இந்தியா, பாகிஸ்தான், பிரிட்டன் கால ஆதிக்கம் உள்ளிட்டவை குறித்து விளக்கப்படுகிறது.
இந்த பேராசிரியர் தற்போது லண்ட் கேம்பிரிட்ஜ் பல்கலை.,யில் பணியாற்றி வருகிறார். இந்த கவுரவ பரிசுக்கு தேர்வு செய்த நீதிபதிகள் இந்த புத்கத்தை ' நவீன தெற்காசியாவின் வரலாறு மிக வசீகரமாக இருப்பதாக' வர்ணித்துள்ளனர்.
55 லட்சத்து 85 ஆயிரம் ரொக்கம்
இது போல் கோல்கட்டாவில் பிறந்த பேராசிரியர் நந்தினிதாஸ் எழுதிய Courting India: England, Mughal India and the Origins of Empire என்ற புத்தகத்திற்கு கிடைத்துள்ளது. இவர் லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலை.,யில் பணியாற்றி வருகிறார். இந்த புத்தகத்தில் பிரிட்டன், இந்தியாவில் மொகலாயர்கள் சாம்ராஜ்யம் உள்ளிட்டவை குறித்து ஆராய்ந்து புத்தகத்தை செதுக்கி உள்ளார். வோல்ப்ஷன் விருது வழங்கப்பட்டவருக்கு பிரிட்டன் அரசு சார்பில் வரும் டிசம்பர் 2 ம் தேதி பாராட்டு விழா நடக்கிறது. இந்த விழாவில் பரிசு பெற்றவர்களுக்கு பிரிட்டன் பவுண்ட் 50 ஆயிரம் வழங்கப்படும்.