மற்றொரு கட்சியும் விலகியதால் இஸ்ரேல் அரசுக்கு நெருக்கடி
மற்றொரு கட்சியும் விலகியதால் இஸ்ரேல் அரசுக்கு நெருக்கடி
ADDED : ஜூலை 17, 2025 02:53 AM
டெல்அவிவ்:இஸ்ரேலில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான அரசுக்கு அளித்து வந்த ஆதரவை, மற்றொரு கூட்டணி கட்சியும் விலக்கி கொண்டது. இதனால், ஆளும் கூட்டணி அரசு பெரும்பான்மையை இழந்தது.
மேற்கு ஆசிய நாடான இஸ்ரேல், ஒரு பக்கம் ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக போர் நடத்தி வருகிறது.
ஈரான் உடனான போர் நிறுத்தப்பட்டாலும் பதற்றம் நீடிக்கிறது. இதுபோல், சிரியா, லெபனான் உள்ளிட்ட நாடுகளில் உள்ள பயங்கரவாத அமைப்புகளின் அச்சுறுத்தல் நீடிக்கிறது. பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப் பெறுவதாக, தீவிர பழமைவாத கட்சியான யுனைடெட் தோராஹ் ஜூடாயிசம் கட்சி அறிவித்தது.
இந்நிலையில், மற்றொரு தீவிர பழமைவாத கட்சியான ஷாஸ், அரசுக்கான ஆதரவை திரும்பப் பெறுவதாக நேற்று அறிவித்துள்ளது.
இதையடுத்து, பார்லிமென்டில் நெதன்யாகு அரசு பெரும்பான்மையை இழந்துள்ளது.
இருப்பினும் ஆட்சி கவிழ்வதை விரும்பவில்லை என்று, கூட்டணியில் இருந்து விலகியுள்ள இரண்டு கட்சிகளும் கூறியுள்ளன.