sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

கடைசி சொட்டு ரத்தம் இருக்கும் வரை... டிரம்புக்கு கியூபா அதிபர் பதில்

/

கடைசி சொட்டு ரத்தம் இருக்கும் வரை... டிரம்புக்கு கியூபா அதிபர் பதில்

கடைசி சொட்டு ரத்தம் இருக்கும் வரை... டிரம்புக்கு கியூபா அதிபர் பதில்

கடைசி சொட்டு ரத்தம் இருக்கும் வரை... டிரம்புக்கு கியூபா அதிபர் பதில்

4


ADDED : ஜன 11, 2026 10:39 PM

Google News

ADDED : ஜன 11, 2026 10:39 PM

4


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஹவானா: கடைசி சொட்டு ரத்தம் இருக்கும் வரை நாட்டை விட்டுக்கொடுக்க மாட்டோம் என்று அமெரிக்க அதிபர் டிரம்புக்கு கியூபா அதிபர் பெர்முடேஸ் பதிலளித்துள்ளார்.வெனிசுலாவைத் தொடர்ந்து, அதன் நெருங்கிய நட்பு நாடான கியூபாவுக்கு அதிபர் டிரம்ப் தொடர்ந்து மிரட்டல் விடுத்திருந்தார். கியூபாவுக்கு இனி எண்ணெய் அல்லது பணம் எதுவும் செல்லாது. தாமதிக்காமல் ஒரு ஒப்பந்தத்தை செய்து கொள்ளுமாறு கடுமையாக பரிந்துரைக்கிறேன் என்று அவர் கூறியிருந்தார்.

இந்த நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்பின் எச்சரிக்கைக்கு கியூபா அதிபர் பெர்முடேஸ் பதிலளித்துள்ளார். கடைசி சொட்டு ரத்தம் இருக்கும் வரை நாட்டை விட்டுக்கொடுக்க மாட்டோம் என்று அவர் கூறியுள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில்; கியூபா ஒரு சுதந்திரமான மற்றும் இறையாண்மை கொண்ட நாடு. நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை யாரும் சொல்ல வேண்டியதில்லை. கடைசி சொட்டு ரத்தம் இருக்கும் வரை நாட்டை விட்டுக்கொடுக்க மாட்டோம்.

நாங்கள் (அமெரிக்கா) கடுமையான பொருளாதாரப் பற்றாக்குறையை எதிர்கொண்டு வருவதாக சொல்லுபவர்கள், வெட்கப்பட்டுத் தங்களின் நாக்கை அடக்கிப் பேச வேண்டும். ஏனெனில், அதற்கான காரணத்தை அவர்களே அறிந்து, ஒப்புக்கொண்டுள்ளனர். கியூபாவின் இந்த நிலைக்குக் காரணம், கடந்த 60 ஆண்டுகளாக அமெரிக்கா செலுத்தி வரும் மிகக் கடுமையான நடவடிக்கைகள் தான்.

மனித உயிர்கள் உட்பட அனைத்தையுமே ஒரு வர்த்தகமாக மாற்றியவர்களுக்கு கியூபாவை பற்றி பேச எந்தவொரு தார்மீக உரிமையும் இல்லை, எனக் குறிப்பிட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us