ADDED : செப் 12, 2025 02:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஹவானா:கியூபாவில் மார்ச் மாதத்திற்கு பின் எரிசக்தி பற்றாக்குறையால், நேற்று முன்தினம் நாடு முழுதும் மின்வெட்டு ஏற்பட்டது.
கரீபிய தீவு நாடான கியூபாவில் மின் கட்டமைப்புகள் பல ஆண்டுகளுக்கு முன் நிறுவப்பட்டவை. அமெரிக்காவின் பொருளாதார தடைக்கு இந்நாடு ஆளாகி இருப்பதால், எரிசக்தி மற்றும் பொருளாதார நெருக்கடிகளை சந்தித்து உள்ளது.
இந்நிலையில் நேற்று முன்தினம் கியூபாவின் மிகப்பெரிய அனல்மின் நிலையத்தின் மென்பொருளில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, மின் உற்பத்தி தடைபட்டது. இதனால் நாடு முழுதும் மின்வெட்டு ஏற்பட்டது.
கடந்த மார்சில் இதேபோல் துணை மின் நிலையங்களில் ஏற்பட்ட பிரச்னையால் கியூபா இருளில் மூழ்கியது.