ADDED : பிப் 14, 2026 06:51 AM
அன்டனானரிவோ: பிப். 14-: மடகாஸ்கரில் வீசிய, 'கெசானி' புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 38 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியப் பெருங்கடலில் உருவான, கெசானி புயல், கிழக்கு ஆப்ரிக்க நாடான மடகாஸ்கரை புரட்டி போட்டுள்ளது. அந்நாட்டின் ஐந்து மாகாணங்களில், 22 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
கு றிப்பாக, இரண்டாவது பெரிய நகரமான டோமாசினா துறைமுக நகரத்தை, இந்த புயல் கடுமையாக தாக்கியுள்ளது. புயல் கரையை கடக்கும் போது, மணிக்கு, 250 கி.மீ., வேகத்தில் சூறைக்காற்று வீசியது.
பலத்த மழையும் பெய்ததால், வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அங்கு, 18,000க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்தன. பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
வெள்ளம் மற்றும் இடிபாடுகளில் சிக்கி இதுவரை, 38 பேர் உயிரிழந்துள்ளனர்; 374 பேர் காயமடைந்துள்ளனர். மாயமான பலரை மீட்புப் படையினர் தேடி வருகின்றனர். 12,000-க்கும் மேற் பட்டோர் வீடுகளை இழந்துள்ளனர்.
