sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

இலங்கை கோர்ட்டில் தாதா சுட்டுக்கொலை:ராணுவ உளவுப்பிரிவு வீரர் கைது!

/

இலங்கை கோர்ட்டில் தாதா சுட்டுக்கொலை:ராணுவ உளவுப்பிரிவு வீரர் கைது!

இலங்கை கோர்ட்டில் தாதா சுட்டுக்கொலை:ராணுவ உளவுப்பிரிவு வீரர் கைது!

இலங்கை கோர்ட்டில் தாதா சுட்டுக்கொலை:ராணுவ உளவுப்பிரிவு வீரர் கைது!

1


ADDED : பிப் 19, 2025 10:14 PM

Google News

ADDED : பிப் 19, 2025 10:14 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொழும்பு: இலங்கை கோர்ட்டில் பிரபல நிழல் உலக தாதா சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில், அந்நாட்டு ராணுவ உளவுப்பிரிவை சேர்ந்த முகமது அஸ்மன் ஷெர்புதீன் என்பவர் புத்தளம் அருகே கைது செய்யப்பட்டார்.

இலங்கையில் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டு வந்த நிழல் உலக தாதா

கணேமுல்லே சஞ்சீவாவை,சிறப்புப் படையினர் இன்று கொழும்பில் உள்ள கோர்ட்டுக்கு அழைத்து வந்திருந்தனர். கோர்ட்டின் உள்ளே அவன் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், தனிப்படை போலீசார், கோர்ட்டிற்கு வெளியே பாதுகாப்புக்காக நின்றிருந்தனர்.

சஞ்சீவா, கூண்டில் இருந்தபோது, ​​மிக அருகில் இருந்து வழக்கறிஞர் போல் இருந்த ஒருவரால் சுடப்பட்டான்.

பலத்த காயமடைந்த சஞ்சீவா ஒரு பாதுகாப்பு வாகனத்தில் ஏற்றப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான். அங்கு அவன் இறந்துவிட்டதாக தேசிய மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் ருக்ஷன் பெல்லானா தெரிவித்தார்.

துப்பாக்கிச் சூட்டில் பயன்படுத்தப்பட்ட ஒரு ரிவால்வரை போலீசார் மீட்டனர்.

சம்பவம் நடந்த சில மணி நேரங்களுக்குப் பிறகு கொலையாளியை போலீசார் புத்தளம் அருகே கைது செய்தனர்.

இலங்கை ராணுவத்தின் உளவுப் பிரிவில் வேலை பார்த்த முகமது அஸ்மன் ஷெர்புதீன் தான் அந்த கொலையாளி என்பது விசாரணையில் தெரியவந்தது.

முகமது அஸ்மன் ஷெர்புதீன் ஏழு கொலை வழக்குகளில் தேடப்படும் நபர்; என்ன காரணத்துக்காக நிழல் உலக தாதாவை அவர் சுட்டுக் கொன்றார் என தீவிர விசாரணை நடந்து வருகிறது.






      Dinamalar
      Follow us